Winamp Logo
SBS Tamil - SBS தமிழ் Cover
SBS Tamil - SBS தமிழ் Profile

SBS Tamil - SBS தமிழ்

English, Current Affairs, 1 season, 2602 episodes, 9 hours, 45 minutes
About
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
Episode Artwork

"வாரத்தில் 4 நாள் வேலை" திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் ஆஸ்திரேலிய நிறுவனம்!

ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், four-day working week- நான்கு நாள் வேலை வாரத்தை வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்ததையடுத்து இத்திட்டத்தை அந்நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/11/20242 minutes, 28 seconds
Episode Artwork

The impacts of First Nations tourism - பூர்வீகக் குடிமக்கள் தொடர்பான சுற்றுலாக்களின் முக்கியத்துவம் என்ன?

Are you seeking a truly impactful Australian travel experience? Whether you’re seeking wilderness, food, art or luxury, there are plenty of First Nations tourism adventure that you can explore, led by someone with 65,000 years of connection to this land. Not only will you deepen your experience, but you’ll help drive cultural and economic opportunities for First Nations communities. - பூர்வீக குடிமக்கள் தொடர்பான பயண அனுபவங்கள் மற்றும் சுற்றுலாக்களில் பங்கேற்பதன் ஊடாக எமது அனுபவத்தை ஆழமாக்குவது மட்டுமல்லாமல், பூர்வீக குடி சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த நாம் உதவலாம். இதுதொடர்பில் Melissa Compagnoni தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
10/11/202410 minutes, 24 seconds
Episode Artwork

Credit rating என்றால் என்ன? அதனை எவ்வாறு பாதுகாப்பது?

Credit rating மற்றும் Credit score என்றால் என்ன? இதனை ஒருவர் அறிந்து கண்காணிப்பது ஏன் முக்கியம்? மேலும் ஒருவரின் தனிப்பட்ட தகவல் திருடப்படும் போது அவரின் Credit rating-ஐ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
10/11/202413 minutes, 36 seconds
Episode Artwork

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவிப்பு நாடாளுமன்ற வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. சூடுபிடிக்கும் தேர்தல் களம்
10/11/20249 minutes, 26 seconds
Episode Artwork

இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலி; ஐநா அமைதி காக்கும் படையினர் காயம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/10/2024) செய்தி.
10/10/20244 minutes, 46 seconds
Episode Artwork

Your GP is the best bet! - உடலும் உள்ளமும் நலம்தானா?

Dr. Varagunan Mahadevan is not just a medical practitioner, but also a theatre personality, broadcaster, singer, multi-facet musician and a presenter on Television in Toronto, Canada. - மனநலம் பற்றி எளிய தமிழில் யாவரும் புரியும் வகையில் விளங்க வைக்கிறார், கனடாவில் வசிக்கும் டாக்டர் வரகுணன் மாகாதேவன் அவர்கள்.
10/10/202415 minutes, 18 seconds
Episode Artwork

தோட்டம் செய்யும் கனவை நனவாக்கும் சமூகத் தோட்டம்

Community Garden சமூகத் தோட்டம் என்றால் என்ன? அங்கு நாம் எவ்வாறு தோட்டம் செய்யலாம்?
10/10/202411 minutes, 45 seconds
Episode Artwork

Eating Disorder-யை கையாள விக்டோரிய மாநில அரசின் புதிய செயற்த்திட்டம்!

Eating disorder உணவு உண்ணும் கோளாறுகள் என்பது ஒரு வகையான தீவிர மனநல நிலையாகும். இதெற்கென ஒரு செயற்திட்டத்தை விக்டோரியா மாநில அரசு முன்வைத்துள்ளது. இப்புதிய செயற்த்திட்டம் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் தனி நபரை மையமாகக் கொண்ட கவனிப்புக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
10/10/202410 minutes, 50 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் திறன் பற்றாக்குறைக்கு அகதிகள் எளிய தீர்வாகுமா?

ஆஸ்திரேலியாவில் பல தகுதி வாய்ந்த அகதிகள் இன்னும் பொருத்தமான வேலைகளில் அமர போராடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் Australia Post அகதிகளை பணியில் அமர்த்தும் ஒரு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் SBS News-இற்காக Edwina Guinan எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
10/10/20245 minutes, 30 seconds
Episode Artwork

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/10/2024) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
10/9/20245 minutes, 8 seconds
Episode Artwork

செனட்டர் பாத்திமா பேமனின் புதிய கட்சி நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

முன்னாள் லேபர் கட்சி செனட்டர் பாத்திமா பேமன் தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சி நாட்டின் பலதரப்பட்ட குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான Dr Bala Wickneswaran அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
10/9/20248 minutes, 59 seconds
Episode Artwork

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் எத்தனை ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் உள்ளன

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலின்படி முதல் 200 இடங்களுக்குள் உள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/9/20242 minutes, 58 seconds
Episode Artwork

உங்கள் மனம் வளம் பெற - ‘மனமே! மனமே!’

Australian Multicultural Arts and Values AMAV, Dr மாலினி ஆனந்தகிருஷ்ணன் எழுதிய ‘மனமே மனமே’ என்ற உளநலம் குறித்த புத்தகம் ஒன்றை இம்மாதம் வெளியிடவுள்ளது. இந்த புத்தகம் குறித்தும் அதன் வெளியீட்டு விழா குறித்தும் உரையாடுகிறார் Dr மாலினி ஆனந்தகிருஷ்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
10/9/20247 minutes, 52 seconds
Episode Artwork

ஆதாரம் இல்லாத வரலாறு ஒருபோதும் நிலைக்காது!

அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கீழடி அகழாய்வினை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய அவர், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிட்னி நகர் வரவிருக்கிறார். அவரது பின்னணி பற்றியும் அவரது சிட்னி வருகை குறித்தும் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
10/9/202414 minutes, 18 seconds
Episode Artwork

கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்? - நடந்தது என்ன??

சிட்னி Greenacre பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
10/9/20247 minutes
Episode Artwork

இந்திய பேசுபொருள்: விமானப்படையின் சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

இந்திய விமானப்படையின் சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
10/9/20248 minutes, 2 seconds
Episode Artwork

தெற்கு QLD, வடக்கு NSW பகுதிகளில் இந்த வாரம் தீவிரமான வானிலை மாற்றங்கள்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
10/8/20243 minutes, 27 seconds
Episode Artwork

குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு மீது மற்றுமொரு சட்ட நடவடிக்கை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
10/8/20243 minutes, 29 seconds
Episode Artwork

நண்பனின் கார் 'தவறுதலாக' மோதியதில் சர்வதேச மாணவர் மரணம்! சிட்னியில் சம்பவம்!!

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் சர்வதேச மாணவர் ஒருவர் தனது நண்பனின் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/7/20242 minutes, 15 seconds
Episode Artwork

Is democracy on the decline in Australia? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறதா?

Home Affairs Minister Clare O’Neil has labelled democracy our most precious national asset. But some people say it’s at risk. - ஜனநாயகம் நமது மிக மதிப்புமிக்க தேசிய சொத்து என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? அது சரிவில் உள்ளதா? இது குறித்து ஆங்கிலத்தில் Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி.
10/7/20246 minutes, 46 seconds
Episode Artwork

இந்திய மற்றும் தமிழகத்தின் தற்கால செய்திகள்!

சத்ரபதி சிவாஜியின் சிந்தனைக்கு எதிராக பாஜகவினர் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் விமர்சனம், காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு! நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் மாநாட்டிற்கு மீண்டும் சிக்கல் மற்றும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்
10/7/20249 minutes, 58 seconds
Episode Artwork

Negative gearing & Capital gain tax-இல் மாற்றம் வீட்டுப் பற்றாக்குறையை தீர்க்குமா?

ஆஸ்திரேலியாவின் வீட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பன்முக அணுகுமுறை தேவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். Negative gearing சீர்திருத்தங்கள் மற்றும் Capital gain tax தள்ளுபடி ஆகியவை அதன் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? இது குறித்து ஒரு மாதிரியை உருவாக்குமாறு கருவூலக்காப்பகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
10/7/20249 minutes
Episode Artwork

காசா போரின் ஓராண்டு நினைவு தினம் - நாடு முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள்!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 07/10/2024) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
10/7/20245 minutes
Episode Artwork

சிட்னி,மெல்பன்,பிரிஸ்பேன் & அடிலெய்ட் நகரங்களில் உரையாற்ற வருகிறார் சித்த மருத்துவர் சிவராமன்

தமிழகத்தின் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான கு.சிவாராமன் அவர்கள் விரைவில் சிட்னி, மெல்பன், பிரிஸ்பேன் மற்றும் அடிலைட் நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். அவரது ஆஸ்திரேலிய பயணம் உட்பட இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம். சிவராமன் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
10/6/202417 minutes, 38 seconds
Episode Artwork

Thinking of installing solar panels? Here's what you need to know - Solar panels-ஐ நிறுவ திட்டமிடுகிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Australia's warm climate offers an abundant supply of solar energy year-round, making solar power an increasingly significant contributor to the nation's electricity supply. Learn what the requirements are for installing solar power systems in your home. - சூரிய மின்னாற்றல் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மின்சார விநியோகத்தில் முக்கிய பங்காளி ஆகியுள்ளது. இந்நிலையில் உங்கள் வீட்டில் சோலார் அமைப்பை நிறுவுவது எப்படி என்பது தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
10/5/20247 minutes, 11 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 05 அக்டோபர் 2024 சனிக்கிழமை.
10/5/20245 minutes, 16 seconds
Episode Artwork

நாட்டில் எந்த suburbs-ஐச் சேர்ந்தவர்களை மோசடிக்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர்?

ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகளில் ஒன்றால் தொகுக்கப்பட்ட புதிய தரவு, நாட்டில் எந்த suburb-களில் உள்ளவர்கள் அதிகளவில் மோசடிகளுக்கு இலக்காகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/4/20242 minutes, 20 seconds
Episode Artwork

யாழ் குடாநாட்டில் குழாய்க்கிணறுகள் பொறுப்பின்றி தோண்டப்படுகிறதா?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் நிறைவுப் பகுதி.
10/4/202414 minutes, 34 seconds
Episode Artwork

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

செய்தியின் பின்னணியில் தொடர்வது, கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்.
10/4/20248 minutes, 15 seconds
Episode Artwork

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி உதவிபெறலாம்?

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் இரண்டாவது பாகம் இது. இந்நிகழ்ச்சியில் குடும்ப வன்முறை குறித்து விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/4/202416 minutes, 37 seconds
Episode Artwork

“தெற்கு லெபனானை விட்டு உடனே வெளியேறவும்” –மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 04/10/2024) செய்தி.
10/4/20244 minutes, 32 seconds
Episode Artwork

யாழ்ப்பாண நண்பர்கள் உலகத்திற்கே உணவூட்ட வழி செய்கிறார்கள்

இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும், விவசாயம் இன்றும் பாரம்பரிய வழி முறையைப் பின்பற்றித் தான் நடக்கிறது. புவி வெப்பமயமாகி வரும் போது, உலக மக்கள் அனைவருக்கும் எப்படி உணவு வழங்க முடியும் என்றும், வளங்களை எப்படி திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் பலரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், சில தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்களில், மில்லர் அலெக்ஸாண்டர் ராஜேந்திரன் மற்றும் ஜெயெந்தன் ஆகிய இருவரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
10/3/202412 minutes, 14 seconds
Episode Artwork

சமூக வலைத்தளங்களும் இளைஞர்களும்

பொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இளைஞர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
10/3/202413 minutes, 52 seconds
Episode Artwork

தாயின் உடல் பருமன் குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது?

தாய்மார்கள் கர்ப்பமுற்றிருக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ, அவர்களது உடல் பருமனாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தன்மை உள்ளிட்ட நரம்பியல் மனநல மற்றும் நடத்தை நிலைமைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
10/3/202410 minutes, 33 seconds
Episode Artwork

நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மையம் தேவை - அழைப்பு வலுக்கிறது!

ஆஸ்திரேலியாவில் நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மற்றும் சுயாதீனமான மையம் தேவை என்று சுகாதார வல்லுநர்கள் அரசிற்கு அழைப்பு விடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தொற்றுநோய் பதிலளிப்பு குறித்த சுயாதீன விசாரணையின் இறுதி அறிக்கை இந்த மாதம் 25ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த வலியுறுத்தல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Sam Dover எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
10/3/20246 minutes, 18 seconds
Episode Artwork

சொந்த அரசியல் கட்சி தொடங்குகிறார் செனட்டர் ஃபாத்திமா பேமன்!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/10/2024) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
10/3/20243 minutes, 57 seconds
Episode Artwork

நாட்டில் வசந்தகாலம்: Magpies தாக்குதல்கள், விழிப்புடன் இருங்கள்

ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் ஆரம்பித்துள்ளது. அத்துடன் இது மாக்பை பறவைகளின் இனப்பெருக்கக் காலமாகவும் காணப்படுகிறது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்கவும், அமைதியாக இருக்கவும், பறவைகளின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்யவும் என அறிவுறுத்தப்பட்டுளார்கள். இதுபற்றி Omoh Bello தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Spring time in Australia represents more than just blooming flowers, it also brings with it swooping season for magpies. Some magpies can be fierce defenders of their territory. Experts are advising people to be aware, stay calm and even try to gain the trust of the birds as ..... reports.
10/2/20247 minutes, 17 seconds
Episode Artwork

2024: ஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த 10 நபர்கள்

ஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த நபர்கள் குறித்த தனது வருடாந்திர பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நாட்டின் அதிசக்தி வாய்ந்த 10 நபர்கள் யாரென்ற பட்டியலைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/2/20242 minutes, 36 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியா முழுவதும் mpox வைரஸ் தொற்று அதிகரிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சில பகுதிகளில் mpox தொற்று அதிகமாக பரவி வருகிறபோதிலும் ஆஸ்திரேலியாவில் இதன் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. இப்போது, ஆஸ்திரேலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/2/20242 minutes, 40 seconds
Episode Artwork

அமெரிக்காவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஆஸ்திரேலியா! பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவில் மின் வாகனங்கள் உட்பட சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்பதான கூற்றை நஷனல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Barnaby Joyce தெரிவித்திருந்தார். அவரது கூற்றின் பின்னணி தொடர்பிலும் அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதன் பின்னணி தொடர்பிலும் பாதுகாப்புபடைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/2/20248 minutes, 19 seconds
Episode Artwork

மலைகள் ஆறுகள் இல்லாத யாழ் குடா நாட்டில் நீர் இருக்குமா?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் முதல் பகுதி.
10/2/202415 minutes, 18 seconds
Episode Artwork

இந்திய பேசுபொருள்: ஒரே நாடு, ஒரே தேர்தல்

ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்வு வரிசையில் பாரதிய ஜனதா தலைமையிலான இந்திய அரசு முன்வைக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் பற்றிய பின்னணியை அலசுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
10/2/20249 minutes, 10 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீனர்களுக்கான முதலாவது மனிதாபிமான விசா வழங்கப்பட்டது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
10/1/20243 minutes, 4 seconds
Episode Artwork

இசைக்கருவிகள், இசைக்கலைஞர்களின் தேடலாக கீதவாணி விருதுகள் 2024

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சிட்னி கிளை நடாத்தும் கீதவாணி விருதுகள் 2024 நிகழ்ச்சி வருகிற ஞாயிறுக்கிழமை (06 October 2024) Parramatta Riverside அரங்கில் நடைபெறவுள்ளது. இதுபற்றிய விவரங்களை சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான அறிவழகன் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் எம்முடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
10/1/20246 minutes, 44 seconds
Episode Artwork

மேற்கு ஆஸ்திரேலிய சிறுமி Cleo Smith-ஐ கடத்தியவரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

மேற்கு ஆஸ்திரேலியாவில் 4 வயதுச் சிறுமி Cleo Smith கடத்தப்பட்ட விவகாரத்தில், பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தனது தண்டனையைக் குறைக்குமாறு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/1/20242 minutes, 13 seconds
Episode Artwork

Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
10/1/20242 minutes, 28 seconds
Episode Artwork

மூன்று சதவீத ஊதிய உயர்வினை NSW செவிலியர்கள் சங்கம் ஏற்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/30/20243 minutes, 8 seconds
Episode Artwork

மெல்பனில் 'பாடும்மீன்' ஸ்ரீகந்தராசாவின் நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர், கவிஞர், சட்டத்தரணி, சமூக செயற்பாட்டாளர், ஒலிபரப்பாளர் என பன்முகம் கொண்ட பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா அவர்களது 'இன்னும் கன்னியாக' மற்றும் 'சங்க இலக்கிய காட்சிகள்' எனும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மெல்பனில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பிலும் அவரது எழுத்துப்பயணம் தொடர்பிலும் ஸ்ரீகந்தராசா அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/30/202421 minutes, 32 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு, முதல் முறையாக நடைபெறும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
9/30/20249 minutes, 14 seconds
Episode Artwork

“இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் இடம் தெரியாமல் சிதைந்துள்ளன”

இலங்கை அதிபர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி சில ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
9/30/202418 minutes, 48 seconds
Episode Artwork

இலங்கையின் புதிய அதிபர் ஊழலை ஒழிப்பாரா?

இலங்கை அதிபர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி சில ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
9/30/202415 minutes, 56 seconds
Episode Artwork

"வாழ்வியல் கல்வி கற்பது வாழ்வின் கடைசி நொடிவரை தொடர்கின்ற ஒன்று"

Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றிவர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
9/30/202412 minutes, 23 seconds
Episode Artwork

ஒரே வாரத்தில் 7 மூத்த Hezbollah தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
9/30/20244 minutes, 7 seconds
Episode Artwork

வானில் இனி 2 நிலா- எப்போது? எப்படிப் பார்ப்பது?

நாம் இரண்டாவது, மிகச் சிறிய நிலா அல்லது சந்திரனைப் பெறப் போகிறோம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? அது ஒரு அதிசய வானியல் நிகழ்வு. இது குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/28/20242 minutes, 26 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 28 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.
9/28/20246 minutes, 11 seconds
Episode Artwork

சிட்னியில் தொடரும் அகதிகள் போராட்டம்- கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் 53 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
9/27/20246 minutes, 1 second
Episode Artwork

மெல்பனில் 75 நாட்களைக் கடந்து தொடரும் அகதிகள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன் 75 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் ரதி அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்
9/27/20246 minutes, 43 seconds
Episode Artwork

30 ஆவது ஆண்டாக, தமிழ் ஊக்குவிப்புப் போட்டி

ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை ஆஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர் சங்கம் நடத்துகிறது.
9/27/202410 minutes, 30 seconds
Episode Artwork

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்
9/27/202410 minutes, 4 seconds
Episode Artwork

“Hezbollahவுடன் போர் நிறுத்தம் செய்ய முடியாது” இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் Hezbollahவுக்கும் இடையே போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நட்பு நாடுகள் பல் ஒன்றிணைந்து தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
9/27/202411 minutes
Episode Artwork

“முழு பலத்துடன் Hezbollahவுடன் தொடர்ந்து போராடுவோம்” – இஸ்ரேலிய பிரதமர்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/09/2024) செய்தி.
9/27/20243 minutes, 58 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் கடைசி "duel" சண்டை செப்டம்பர் 27, 1851

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.
9/27/20243 minutes, 4 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் எந்த பகுதிகளில் வீடுகளின் விலைகள் குறைகின்றன?

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட 30 சதவீத suburbsஇலுள்ள வீடுகளின் மதிப்பு ஆகஸ்ட் வரையான கடந்த மூன்று மாதங்களில் குறைந்துள்ளதாக CoreLogicஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/26/20242 minutes, 45 seconds
Episode Artwork

2025இல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் எத்தனை புதிய சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

2025 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பு 270,000 ஆக அரசு நிர்ணயித்துள்ள பின்னணியில், சில முக்கிய பல்கலைக்கழகங்களில் 2025 இல் எத்தனை புதிய சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தேச எண்ணிக்கை குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/26/20242 minutes, 49 seconds
Episode Artwork

சூப்பர் மார்க்கெட் விளம்பரப்படுத்தும் தள்ளுபடி உண்மையான தள்ளுபடி விலையா?

Australian Consumer and Competition Commission Coles மற்றும் Woolworths நிறுவனங்கள் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி அந்நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே Coles மற்றும் Woolworths குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் என்ன வகையான அபராதம் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பெரிய நிறுவனங்களை பொறுப்புக்கூற வைப்பதில் நுகர்வோர் என்ன பங்கு வகிக்க முடியும்? என்பதனை விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Catriona Stirrat எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
9/26/20248 minutes, 40 seconds
Episode Artwork

அகதிகளுக்கான புதிய மீளாய்வு தீர்ப்பாயம் - அரசின் சட்டமுன்வடிவு மாற்றத்தினால் பாதிப்பு என்ன?

ஆளும் லேபர் அரசு கொண்டுவரவுள்ள Administrative Review Tribunal ART அமைப்பதற்கான சட்டமுன்வடிவில் சில மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது பலரின் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இது புகலிடக் கோரிக்கையாளர்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அகதிகளின் செயற்பாட்டாளரான கலாநிதி பாலா விக்னேஸ்வரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை வழங்குகிறார் செல்வி.
9/26/20248 minutes, 37 seconds
Episode Artwork

Tamil archeological finds by a school teacher ! - தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தோண்டும் (தேடும்) ஆசிரியர்

An enthisiastic teacher and his friends are involved in Archaeological Research in Pudukkottai. Kulasegaram Sanchayan, talks to the founder, Manikandan about his activities. - புதுக்கோட்டையில் பண்டைக்கால இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள், உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக் கலன்கள் ஆகியவை இருப்பதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் சொல்கிறார்கள். இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
9/26/202424 minutes, 3 seconds
Episode Artwork

முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?

Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
9/26/202412 minutes, 26 seconds
Episode Artwork

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/09/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
9/26/20244 minutes, 20 seconds
Episode Artwork

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.... புதிய தேர்தல் எப்போது?

இலங்கையில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.
9/25/202410 minutes, 23 seconds
Episode Artwork

உதயா: பூர்வீகக் குடிமக்களுடன் இணைந்து செயற்படும் தமிழ்ப்பெண்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Djukun பூர்வீகக்குடி மக்களுடனான உறவு மற்றும் அந்த சமூகத்துடன் இணைந்து கலாச்சார குணப்படுத்துதல் மறுமலர்ச்சியை நோக்கிய அவரது பகிரப்பட்ட பயணத்தை மையமாகக் கொண்டு, பூர்வீகக் குடி பின்னணி கொண்ட பெண்களுக்கிடையேயான பிணைப்பை எடுத்துக்காட்டும் தனது நினைவுக் குறிப்பை எழுதிய உதயா சண்முகம் என்ற ஆர்வலரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
9/25/202412 minutes, 28 seconds
Episode Artwork

ஐவரைப் பலிகொண்ட Daylesford விபத்து: ஓட்டுநர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விக்டோரியாவின் Daylesford பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப்பின்னணிகொண்ட ஐவர் கொல்லப்பட்டிருந்தநிலையில் இவ்விபத்திற்குக் காரணமான ஓட்டுநர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/25/20246 minutes, 51 seconds
Episode Artwork

இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா?

இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சவாலா என்ற ஓர் அலசலுடனும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடரும் ஆயுத பதற்றம் பற்றிய சிறு பார்வையுடனும் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
9/25/202412 minutes, 45 seconds
Episode Artwork

சிட்னியின் நாளைய வெப்பநிலை 20 செல்சியஸ் வரை குறையும் என எதிர்பார்ப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/24/20243 minutes, 24 seconds
Episode Artwork

நாட்டின் வட்டி வீதத்தில் மாற்றமில்லை - Reserve வங்கி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் 4.35 என்ற அளவிலேயே தொடர்ந்தும் பேணப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/24/20242 minutes, 37 seconds
Episode Artwork

Can we fight misinformation without threatening our freedom of speech? - SBS Examines : நமது பேச்சு சுதந்திரத்தை பாதிக்காமல் தவறான தகவல்களை எதிர்த்து போராட முடியுமா?

There are calls to crack down on the sharing of misinformation online. But would this be an attack on free speech? - பேச்சு சுதந்திரம் - ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகப் பாதுகாக்கப்படாவிட்டாலும், இது ஒரு அடிப்படை மனித உரிமை.
9/24/20246 minutes, 41 seconds
Episode Artwork

இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகல்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/23/20243 minutes, 26 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல், பணிச்சுமையால் இளம் பெண் மரணம் - விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடும், அதை தொடரும் அரசியல் சர்ச்சைகளும் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
9/23/20249 minutes, 17 seconds
Episode Artwork

‘வீட்டுப் பிரச்சனை’ நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை செல்லுமா?

நாட்டிலுள்ள ‘வீட்டு' பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் போதாது என்று Greens கட்சியினரும், அரசு தவறான தீர்வை மக்கள் மீது திணிக்கிறது என்று Coalition எதிர்க் கட்சிகளும் குற்றம் சாட்டுவதால் இது குறித்த சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தீர்ப்பதற்கு அரசின் முயற்சிகள் தோல்வி கண்டு வருகின்றன.
9/23/202410 minutes, 30 seconds
Episode Artwork

இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திஸாநாயக்க நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாரா?

கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கையில் நடந்த அதிபருக்கான தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார்.
9/23/202412 minutes, 35 seconds
Episode Artwork

இலங்கையின் அடுத்த அதிபராக அநுர குமார திஸாநாயக்க இன்று பதவியேற்கிறார்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
9/23/20245 minutes, 1 second
Episode Artwork

மாணவர் விசாவில் வருபவர்கள் தங்களின் குடும்பத்தை அழைத்து வர முடியுமா?

மாணவர் விசாவில் இங்கு வருபவர்கள் தங்களின் குடும்பத்தை எவ்வாறு அழைத்து வருவது? அதில் உள்ள நடைமுறை என்ன? மேலும் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் கல்வி கற்று முடித்த பின் அவர்களுக்கு இங்குள்ள வாய்ப்புகள் யாவை? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
9/23/202411 minutes, 2 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 21 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.
9/21/20246 minutes, 19 seconds
Episode Artwork

NSW மாநில ரயில் பயணிகள் இந்த வார இறுதியில் இலவசமாக பயணம் செய்யலாம்

இந்த வார இறுதியில் அதாவது செப்டம்பர் 21 மற்றும் 22ம் திகதிகளில் Sydney Trains, NSW TrainLink, Airport Link மற்றும் Sydney Metro மூலம் இயக்கப்படும் அனைத்து Opal network சேவைகளிலும் ரயில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/20/20242 minutes, 2 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியது

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 27 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/20/20242 minutes, 31 seconds
Episode Artwork

செப்டம்பர் 21: உலக அமைதி நாள் (International Day of Peace)

உலக அமைதி நாள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது. அமைதி கலாச்சாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டு இந்த வருடம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9/20/202417 minutes, 58 seconds
Episode Artwork

Understanding shared housing in Australia - மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை

Shared housing is becoming increasingly popular in Australia, as more people look to reduce rental costs. So, what key factors should you consider when searching for shared accommodation, and how can you avoid potential scams? - வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், அதிகமான மக்கள் shared housing- பகிரப்படும் வீடுகளை நாடுகின்றனர். இப்படியாக மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
9/20/20247 minutes, 28 seconds
Episode Artwork

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்.
9/20/20249 minutes, 31 seconds
Episode Artwork

“தகவல் தொடர்பு சாதன வெடிப்புகள் வரம்பு மீறிவிட்டன! பதிலடி கொடுக்கப்படும்” - ஹெஸ்புல்லா

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/09/2024) செய்தி.
9/20/20244 minutes, 37 seconds
Episode Artwork

2050இல் டிமென்ஷியாவின் எண்ணிக்கை மூன்று மடங்காகாகும்

டிமென்ஷியாவின் எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா ஏன் ஏற்டபடுகிறது? இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
9/19/202411 minutes, 12 seconds
Episode Artwork

அதிகளவான ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர் தெரியுமா?

COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இழந்த தமது மகிழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலியர்கள் அதிகளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஒருபக்கம் உள்ளபோதிலும் சர்வதேச பயணங்கள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு அப்பால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/19/20242 minutes, 12 seconds
Episode Artwork

பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி?

நாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
9/19/202412 minutes, 21 seconds
Episode Artwork

ஆதிச்ச நல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.
9/19/202414 minutes, 14 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியா 75-வது குடியுரிமை தினத்தை கொண்டாடுகிறது

கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 75-வது ஆஸ்திரேலிய குடியுரிமை தினமாகும். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விழாக்களில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் ஆஸ்திரேலியாவின் புதிய குடிமக்களாக மாறியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
9/19/20246 minutes, 10 seconds
Episode Artwork

பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகமாகிறது!

பெடரல் அரசு முதியோர் பராமரிப்பு துறையில் சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
9/19/20249 minutes, 14 seconds
Episode Artwork

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது - இங்கு மாற்றம் வருமா?

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/09/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
9/19/20244 minutes, 8 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான சாலைகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் சாலைவிபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள மிக ஆபத்தான வீதிகளின் பட்டியலை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI தனது புதிய Crash Index அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/18/20243 minutes, 19 seconds
Episode Artwork

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம்!

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணம் செய்திருந்தார். அது தொடர்பான தொகுப்புடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
9/18/20248 minutes, 47 seconds
Episode Artwork

“Siddha medicine addresses many issues that modern medicine cannot” - “நவீன மருத்துவம் தீர்க்கமுடியாத பலவற்றை சித்தா மருத்துவம் தீர்க்கிறது"

Dr Y. R. Manekshah, M.D. (Siddha) is an Associate Professor at the Government Siddha Medical College and Hospital in Palayangottai under the Department of Siddha Medicine, Government of Tamil Nadu. Dr. Manekshah has authored several books on Siddha medicine, covering topics such as infertility, liver diseases, thyroid disorders, heart conditions, kidney ailments, and neurological diseases. In addition to being a renowned Siddha practitioner, he is also a psychotherapist, author, and speaker. - Dr Y R மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சித்தா மருத்துவர் மானக்சா அவர்கள் சித்த மருத்துவத்தில் குழந்தையின்மை, கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார்.
9/18/202413 minutes, 25 seconds
Episode Artwork

Blue Mountains-இல் கொலை செய்யப்பட்ட இரு சிறுவர்கள்- தாய் கைது- பின்னணி என்ன?

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Blue Mountainsஸில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு ஆண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தநிலையில் அவர்களின் தாய் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
9/18/20246 minutes, 46 seconds
Episode Artwork

உணவும் நீரிழிவு நோயும் - அசட்டையாக இருக்காதீர்கள்!

நீரிழிவு நோய் உங்களை அணுகாமல் இருக்க நன்கு சரிவிகித உணவு வகைகளை உட்கொள்வது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்தல் அவசியம். நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது நாம் உண்ணும் உணவு. நீரிழிவு நோயின் பதிப்புகள் அதனை எவ்வாறு வரும் முன் தடுப்பது மற்றும் எவ்வாறு உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
9/18/202410 minutes, 43 seconds
Episode Artwork

பாதாள உலகிற்கான செயலியை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/17/20243 minutes, 29 seconds
Episode Artwork

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து கட்டணம் 50 சதங்களாகவே தொடரவுள்ளது!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் நிரந்தரமாக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/17/20242 minutes, 42 seconds
Episode Artwork

இந்திய மாணவர்களின் ஆஸ்திரேலிய கனவினைச் சிதைக்கும் விசா மோசடிகள்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/16/20242 minutes, 53 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

மேற்கு வாங்க மாநிலத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - முதலமைச்சர் மம்தாவிற்கு நெருக்கடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சை உரையாடல் மற்றும் தமிழகத்தில் அதிமுக - பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாகுமா? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
9/16/20249 minutes, 13 seconds
Episode Artwork

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல மற்றுமொரு முயற்சி!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
9/16/20244 minutes
Episode Artwork

ஐ.நா மனித உரிமை பேரவை: இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் நீட்டிக்கப்படுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகியது.
9/14/202412 minutes, 15 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 14 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.
9/14/20248 minutes, 5 seconds
Episode Artwork

தனது Dulwich Hill வீட்டை விற்கும் பிரதமர் Anthony Albanese!

ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமர் Anthony Albanese, சிட்னி Dulwich Hillஇல் உள்ள தனது முதலீட்டுச் சொத்தை விற்பனைக்கு விட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/13/20242 minutes, 10 seconds
Episode Artwork

மாத்தளை சோமுவின் “ஒற்றைத்தோடு”

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆளுமை மாத்தளை சோமு அவர்கள். அவரின் அடுத்த படைப்பிலக்கியமாக “ஒற்றைத்தோடு” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. தனது சிறுகதைத்தொகுப்பு குறித்தும், அடுத்துவரும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்தும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
9/13/202411 minutes, 5 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

பொறுப்புக்கூறலுக்கு புதிய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் - ஐ.நா மனித உரிமை பேரவை கோரிக்கை! தேர்தல் நாள் நெருங்குகிறது - அரசியல் மேடைகளில் பேசப்படும் விடயங்கள் எவை?
9/13/202410 minutes, 35 seconds
Episode Artwork

தங்கம் விலை ஏன் கூடுகிறது? தொடர்ந்து அதிகரிக்குமா?

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கான காரணம் தொடர்பிலும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா என்பது தொடர்பிலும் பதிலளிக்கிறார் தமிழ் நாட்டின் பிரபல பொருளியல் நிபுணரும் Hindustan Chamber of Commerce நிறுவனத்தின் தலைவருமான வள்ளியப்பன் நாகப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/13/20249 minutes, 55 seconds
Episode Artwork

Indigenous astronomy: How the sky informs cultural practices - பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு வானியல் அறிவு

Astronomical knowledge of celestial objects influences and informs the life and law of First Nations people. - பூர்வீக குடிமக்களின் வானியல் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவு அபாரமானது. இது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/13/20249 minutes, 49 seconds
Episode Artwork

முதியோர் பராமரிப்பு சீர்திருத்தங்கள்: வீட்டிலேயே தங்குவதற்கான ஆதரவு அதிகரிக்கிறது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/09/2024) செய்தி.
9/13/20244 minutes, 36 seconds
Episode Artwork

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது - விரைவில் வரவுள்ள சட்டம்

இந்த ஆண்டு இறுதிக்குள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நடைமுறைப்படும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக Federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
9/13/20248 minutes, 49 seconds
Episode Artwork

அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை கொண்டாடும் தமிழக கிராமம்! - ஒரு நேரடி ரிப்போர்ட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டும் என்று ஒரு தமிழக கிராமம் காத்திருக்கிறது. துளசேந்திரபுரம் என்ற கமலா ஹாரிசின் பூர்வீக கிராமத்திற்கு பயணம் செய்து விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
9/12/20247 minutes, 31 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய பயணிகள் பிரிட்டன் செல்வதற்கு இனி பயண அனுமதி பெறவேண்டும்!

பிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் விரைவில் Electronic Travel Authorisation (ETA) எனப்படும் பயண அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/12/20242 minutes
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குடியேற விரும்புபவர்களுக்கான வாய்ப்பு!

விக்டோரியா தனது 2024-25 ஆம் ஆண்டுக்கான Skilled visa nomination திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/12/20242 minutes, 19 seconds
Episode Artwork

Title: Does culture influence teaching/learning Mathematics? - கணிதம் கற்பதிலும் கற்பித்தலிலும் வேறுபாடுகள் இருக்கிறதா? புதிருக்கான விடை!

The Learner's Perspective Study (LPS) pioneered by Dr David Clarke inspired a search on how mathematics is taught in the Indian Subcontinent and how students from the subcontinent in Australia learn mathematics. - கணிதம் கற்பிக்கும் முறை, கற்கும் முறை இவை இரண்டும் எப்படி கலாச்சாரத்தாக்கங்களுக்கு உள்ளாகின்றன என்பதை, ஆராய்ச்சியாளர், ஜெயந்தி சுப்ரமணியன் வாயிலாகவும், ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சுபா, மாணவர்கள் சமந்தா, ஆர்த்திகன் வாயிலாகவும் அறியும் முயற்சி.
9/12/202421 minutes, 27 seconds
Episode Artwork

பணியிடங்களில் பலர் நெகிழ்வுத்தன்மையை விரும்புவதாக கூறுகிறது ஒரு அறிக்கை

பணியிட நேரங்கள் மற்றும் எங்கிருந்து வேலை செய்வது போன்ற பணியிட ஏற்பாடுகளில் ஆஸ்திரேலியர்கள் நெகிழ்வுத்தன்மையை அதிகம் எதிர்பார்ப்பதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Alex Anyfantis எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
9/12/20246 minutes, 54 seconds
Episode Artwork

நீங்கள் நலமா என்று விசாரிப்பது ஏன் முக்கியம் : R U OK

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை RUOK தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரின் மனநல ஆரோக்கியம் RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
9/12/202412 minutes, 50 seconds
Episode Artwork

மெல்பன் ஆர்ப்பாட்டம் - காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/09/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
9/11/20244 minutes, 2 seconds
Episode Artwork

கமலா ஹரிஸ், டிரம்ப் விவாதம்: 'குடிவரவாளர்கள் நாய் பூனைகளைப் பிடித்து உண்கிறார்கள்'

அமெரிக்கத் தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவேயுள்ள பின்னணியில், ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தங்களது முதல் விவாதத்தில் இன்று கலந்துகொண்டனர். தத்தமது கொள்கைகள் பற்றி இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இக் கடுமையான விவாதம் பற்றி விவரிக்கிறார் அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறையின் தலைவராகக் கடமையாற்றும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
9/11/202412 minutes, 1 second
Episode Artwork

10 பேரை பலிகொண்ட NSW பேருந்து விபத்து- ஓட்டுநருக்கு 32 ஆண்டுகள் சிறை!

Hunter Valley பேருந்து விபத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் Brett Buttonக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/11/20242 minutes, 35 seconds
Episode Artwork

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? திருவுளச்சீட்டா தீர்மானிக்கப்போகிறது??

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள 'ஒருவன்' செய்திச் சேவையின் ஆசிரியர் நிக்சன் அமிர்தநாயகம் அவர்களோடு அலசுகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/11/202411 minutes, 58 seconds
Episode Artwork

தமிழக பேசுபொருள்: தமிழக அரசு பள்ளியில் மூடநம்பிக்கை உரை

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளர் நிகழ்த்திய உரை மூட நம்பிக்கையை விதைக்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
9/11/20247 minutes, 53 seconds
Episode Artwork

Paraolympics: ஒலிம்பிக் போட்டிகளின் இன்னொரு முகம்

நடந்து முடிந்த Paraolympics குறித்த செய்தியின் பின்னணியை பிரான்ஸ் இலிருந்து முன்வைக்கிறார் ஊடகவியலாளர் S K ராஜன் அவர்கள்.
9/11/202412 minutes, 15 seconds
Episode Artwork

மேற்கு ஆஸ்திரேலிய அரசின் விருதுபெறும் தமிழ் ஆசிரியை!

மேற்கு ஆஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு Emerging Community Language Teacher of the Year Award எனும் பெருமைமிகு விருதை பெர்த் நகரில் வாழும் தமிழ் ஆசிரியை கார்த்திகா ரஞ்சித்குமார் அவர்கள் பெற்றுள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசின் குடியுரிமை மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் Dr Tony Buti அவர்களிடமிருந்து இந்த விருதை பெற்ற கார்த்திகா அவர்களுடனும், அவர் ஆசிரியராக பணியாற்றும் பெர்த்-Canning Vale அவ்வையார் தமிழ் பள்ளிக்கூட செயலாளர் ராஜவேலன் அவர்களையும் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
9/11/202411 minutes, 18 seconds
Episode Artwork

ஒன்பது மற்றும் பதினொரு வயதுடைய சிறார்கள் உயிரிழப்பு - தாய் கைது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/10/20243 minutes, 23 seconds
Episode Artwork

SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
9/10/20244 minutes, 56 seconds
Episode Artwork

600 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான seasonal workers எனப்படுகின்ற குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அமேசான் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/10/20241 minute, 41 seconds
Episode Artwork

NSW மாநில ஓட்டுநர்களைக் கண்காணிக்கவுள்ள Point-to-point கமராக்கள்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் average speed கமராக்கள்/ Point-to-point speed கமராக்கள் ஊடாக அனைத்து ஓட்டுனர்களின் வேகமும் கண்காணிக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/10/20242 minutes, 9 seconds
Episode Artwork

கன்பராவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வாகனங்களுடன் சென்று போராட்டம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/9/20243 minutes, 4 seconds
Episode Artwork

Sydney debut: First Indian vocal and jazz fusion concert - சிட்னியில் தமிழ் கலந்து ஒரு வரலாற்று இசை நிகழ்வு!

Swapna Raghavan, founder of the Stage Foundation, is organising an event called Shakti Spirit to raise awareness about Type 1 Diabetes, using music and arts as tools. Australian jazz artist Dr. Sandy Evans and trailblazing artist Jess Green are collaborating with Indian classical vocalist Nadhamuni Gayatri Bharat and Ghatam artist Prahlad Iyer for the first time. While Swapna discusses the objectives behind the initiative, Gayatri explains the significance of this historic fusion performance. Produced by RaySel. - டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இசை மற்றும் கலைகளை கருவிகளாகப் பயன்படுத்தி Stage Foundation அமைப்பின் நிறுவனர் ஸ்வப்னா ராகவன் “Shakti Spirit” என்ற நிகழ்வை அரங்கேற்றுகிறார். ஆஸ்திரேலிய ஜாஸ் கலைஞர் Dr. Sandy Evans மற்றும் டிரெயில்பிளேசிங் கலைஞர் Jess Green ஆகியோர் முதன்முறையாக இந்திய பாரம்பரிய பாடகர் நாதமுனி காயத்ரி பாரத் மற்றும் கடம் கலைஞர் பிரஹலாத் ஐயர் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்வை நடத்துகின்றனர். இந்த நிகழ்வு குறித்து ஸ்வப்னா அவர்களும் காயத்ரி அவர்களும் விளக்குகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
9/9/202413 minutes, 39 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், ஜம்மு - காஷ்மீரில் ஒருபோதும் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படாது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி நடத்தும் முதல் மாநாட்டிற்கு கடும் சிக்கல் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா் கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
9/9/20249 minutes, 23 seconds
Episode Artwork

பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகள் மீதான ஆணைக்குழு அறிக்கை இன்று வெளியாகிறது

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
9/9/20244 minutes, 9 seconds
Episode Artwork

கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும் பரிசோதனை!

கருப்பை கழுத்து புற்றுநோய் Cervical Cancer, வரும் முன் அறிந்துக்கொண்டால் அதனை முழுவதும் தடுக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் Cervical Screening பரிசோதனை செய்துகொள்வதால் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். இப்பரிசோதனை பற்றியும் இதனை செய்வதன் மூலம் எவ்வாறு கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும் என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
9/9/202411 minutes, 11 seconds
Episode Artwork

கிரின்ஸ் கட்சியின் NRPA ஆணையம் வாடகை வீடுகளில் உள்ளவர்களை பாதுகாக்குமா?

வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றும் வாடகைச் சட்டத்தை பின்பற்றாத ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட National Renters Protection Authority தேசிய வாடகைதாரர்கள் பாதுகாப்பு ஆணையம் என்ற திட்டத்தை கிரீன்ஸ் கட்சி முன்வைத்துள்ளது. இது குறித்து பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான அரன் கந்தையா அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
9/8/20248 minutes, 18 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 7 செப்டம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
9/6/20244 minutes, 43 seconds
Episode Artwork

Why is dental health care expensive in Australia? - ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவம் தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Understanding how dental care works in Australia can be crucial for maintaining your health and well-being. Learn how to access dental services, the costs involved, and some essential dental health tips to keep you and your family smile bright. - ஆஸ்திரேலியாவில் பல் பராமரிப்பு சேவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கு முக்கியமானது. இந்த விவரணத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு சேவைகளை எவ்வாறு அணுகுவது, அதற்கான செலவுகள் மற்றும் சில அத்தியாவசிய பல் சுகாதார குறிப்புகளைப் பார்ப்போம். ஆங்கில மூலம்: Maram Ismail. தமிழில்: றேனுகா துரைசிங்கம்
9/6/202410 minutes, 45 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய பெற்றோர் விசாக்களுக்காகக் காத்திருக்கும் 151,000 பேர்!

ஆஸ்திரேலியாவிற்கு தங்கள் பெற்றோரை அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்த குடும்பங்களால் தாக்கல்செய்யப்பட்ட 151,590 க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.தங்கள் பெற்றோரை நிரந்தர விசாவில் இங்கே அழைத்துவர விரும்பும் ஒவ்வொரு நபரும் அதைச் செய்ய முடியாத நிலை உள்ளதாக குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill, SBS பஞ்சாபியிடம் தெரிவித்தார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/6/20242 minutes, 27 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய கட்சிகளின் கொள்கை பிரகடனங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள்; இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு; தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
9/6/20248 minutes, 17 seconds
Episode Artwork

“உங்கள் வங்கியிலிருந்து உங்களை அழைக்கிறோம்” என்று தொலைபேசி வந்தால் என்ன செய்வீர்கள்?

நம்மைச் சுற்றி மோசடி வலைகள் விரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று வங்கியிலிருந்து நம்மை அழைப்பதாகக்கூறி நம்மை ஏமாற்றுவது. இப்படியான மோசடிகளில் நாம் சிக்காமலிருக்க சில யோசனைகளை முன்வைக்கிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருபவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
9/6/202412 minutes, 3 seconds
Episode Artwork

"வட்டி வீதக் குறைப்புகளை எதிர்வரும் காலாண்டில் எதிர்பார்க்க முடியாது" - ரிசர்வ் வங்கி கவர்னர்

செய்திகள்: 06 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை வாசித்தவர்: செல்வி.
9/6/20244 minutes, 54 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியர்கள் ஏன் அதிகளவில் சூதாட்டங்களுக்கு அடிமையாகின்றனர்?

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சூதாட்டத்தில் இழக்கின்றனர். இது உலகலாவிய ரீதியில் மிகப்பெரிய இழப்பாக நோக்கப்படுகிறது. சூதாட்ட அடிமைத்தனத்தில் ஆஸ்திரேலியர்கள் முன்னணியில் திகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
9/5/20248 minutes, 49 seconds
Episode Artwork

யார் துறவி? நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம்!

தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு “துறவு” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
9/5/202411 minutes, 46 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆறு மாதங்களில் 14,877 பேர் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பம்

ஆஸ்திரேலியாவில் இவ்வருடம் ஜுலை வரையிலான 6 மாத காலப்பகுதியில் 14, 877 பேர் இங்கிருந்தபடி புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/5/20242 minutes, 24 seconds
Episode Artwork

60 நாட்களுக்கு வாங்கும் மருந்துகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்தது!

பார்மசி அல்லது மருந்தகங்கள் ஒரு நோயாளிக்கு மருந்துகளை 30 நாட்கள் மட்டுமே தருகின்ற முறையை மாற்றி, இனி 60 நாட்களுக்கு தரலாம் என்பதாக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டத்தின்கீழ் சுமார் 300 மருந்துகளை தாம் இணைத்திருப்பதாக அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. Civic Medical Centre, Pendlehill, NSW எனுமிடத்தில் மருத்துவ சேவை நிலையத்தை நிறுவி நிர்வகித்து வரும் Dr பரண் சிதம்பரகுமார் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
9/5/202410 minutes, 59 seconds
Episode Artwork

எதற்கும் கவலைப்படுபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது!

உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் திரு துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி.
9/5/202410 minutes, 28 seconds
Episode Artwork

வாடகை வீடுகளில் வாழ்கின்றவர்களுக்கு அதிக உரிமைகள் வழங்க அரசு யோசனை

செய்திகள்: 5 செப்டம்பர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
9/5/20245 minutes, 25 seconds
Episode Artwork

உணர்வு ரீதியான துன்புறுத்தல் வளரும் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது?

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் முன்பை விட அதிகமாக உணர்வு ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்து பாதி பேர் மட்டுமே அதிகாரிகளிடம் புகார் செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Omoh Bello எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
9/5/20247 minutes, 27 seconds
Episode Artwork

மொபைல் போன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் மூளைப் புற்றுநோய் ஏற்படுமா?

மொபைல் போன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் மூளைப் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில் இதற்கான பதிலை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/4/20242 minutes, 34 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் எந்தத்துறையில் கல்வி கற்றால் அதிகம் சம்பாதிக்கலாம்?

ஆஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் தமது கற்கை நெறியை தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
9/4/202411 minutes, 27 seconds
Episode Artwork

மெல்பனில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்- கணவனே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

மெல்பனில் இலங்கைப் பெண்ணொருவர் கத்தி மற்றும் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் அவரது முன்னாள் கணவர்தான் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/4/20246 minutes, 42 seconds
Episode Artwork

தமிழக பேசுபொருள்: அதிமுக கரைந்துவிடுமா?

தமிழ்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான அதிமுக கரைந்துவிடும் என்ற விமர்சனம் எழும் பின்னணியில் அதிமுக சந்திக்கும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
9/4/20248 minutes, 3 seconds
Episode Artwork

குடும்ப வன்முறையை எப்படி அடையாளம் காண்பது? அறிகுறிகள் என்ன?

குடும்ப வன்முறை தடுக்கப்படவேண்டும் என்ற ஒருமித்த கருத்து மக்கள் மத்தியில் இருந்தாலும், குடும்ப வன்முறை என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. இந்த பின்னணியில் குடும்ப வன்முறை குறித்து விளக்குகிறார் மனநலம் சார்ந்து குடும்பங்களோடு பணியாற்றும் Social Worker ரூனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
9/4/202414 minutes, 24 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய வரலாற்றில் பெரிய அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கும் முதல் பூர்வீகக் குடியினப் பெண்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/3/20243 minutes, 11 seconds
Episode Artwork

சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மூன்று மடங்காக அதிகரித்துள்ள நியூசிலாந்து!

நியூசிலாந்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான international visitor levy (IVL) 100 நியூசிலாந்து டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
9/3/20242 minutes, 6 seconds
Episode Artwork

Centrelink கொடுப்பனவு தொகை அதிகரிப்பு: யாரெல்லாம் பெறமுடியும்?

Centrelink கொடுப்பனவு பெறுபவர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கான உதவித்தொகை, செப்டம்பர் 20 முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
9/3/20242 minutes, 24 seconds
Episode Artwork

குழந்தைகள் பராமரிப்பாளர் மீதான 300க்கு மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நிரூபிப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
9/2/20243 minutes, 19 seconds
Episode Artwork

What are the unwritten rules in the Australian workplace? - ஆஸ்திரேலிய பணியிடங்களில் காணப்படும் எழுதப்படாத விதிகள்

In Australia, workplace codes of conduct differ from company to company, but some standard unwritten rules are generally followed in most businesses and industries. There are also a few unspoken rules in the Australian workplace that can evolve into a set of social norms. Here is how to navigate and familiarise yourself with these unwritten rules when starting a new job. - ஆஸ்திரேலியாவில், பணியிட நடத்தைக் கோட்பாடுகள் நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடுகின்றன, ஆனால் சில பொதுவான எழுதப்படாத விதிகள் பெரும்பாலான வணிகங்கள் மற்றும் தொழில்களில் பின்பற்றப்படுகின்றன. ஒரு புதிய வேலையைத் தொடங்கும்போது எழுதப்படாத இந்த விதிகளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும் உங்களைப் பழக்கப்படுத்துவது என்பதை இந்த விவரணத்தில் பார்ப்போம். ஆங்கில மூலம்: Chiara Pazzano. தமிழில்: றேனுகா துரைசிங்கம்
9/2/202410 minutes, 1 second
Episode Artwork

Ozempic & Wegovy மருந்துகளை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படுமா?

Ozempic மற்றும் Wegovy மருந்துகள் யாருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன? அதன் செயற்பாடு என்ன? அதில் உள்ள நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் யாவை? மேலும் இந்த மருந்துகள் சிலருக்கு உளநல பிரச்சனையை உருவாக்குவதாக வெளிவந்துள்ள ஆய்வு குறித்தும் விரிவாக உரையாடுகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக கடமையாற்றி வரும் டாக்டர் நளாயினி சுகிர்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
9/2/202410 minutes, 40 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை ஏற்படுத்தும் பெரும் அதிர்வலைகள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் மற்றும் ஃபார்முலா 4 கார் பந்தயம் Vs. தமிழக அரசியல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
9/2/20249 minutes, 16 seconds
Episode Artwork

சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் வரம்பு அறிவித்துள்ள அரசு - மேலதிக தகவல்!

சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் வரம்பு நிர்ணயிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது மேலும் இது 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பவித்ரா வரதலிங்கம் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
9/2/20248 minutes, 7 seconds
Episode Artwork

நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தொடரும் கடுமையான வானிலை! ஒருவர் பலி!!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
9/2/20244 minutes, 12 seconds
Episode Artwork

“அப்பா, தந்தையும் தாயுமானவர்”

Father’s Day - தந்தையர் தினம் குறித்த சிறப்புப் பதிவு. சிறு வயதில் தனது தாயை இழந்த நிலையில் எளிய பின்னணி கொண்ட தனது தந்தை தங்களுக்காக மறுமணமே செய்யாமல் தன்னையும் தனது தங்கையையும் எப்படி வாழ்வில் உயர்த்தினார் என்று பதிவு செய்கிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் ஒலிபரப்பாளர் R.பாரதிதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். (இந்த பதிவு முதலில் 2020ஆம் ஆண்டு ஒலிபரப்பானது)
9/1/20246 minutes, 25 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 31 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
8/30/20244 minutes, 52 seconds
Episode Artwork

ஆண்களை புரிந்துகொள்வது ஏன் தேவை? எப்படி புரிந்துகொள்வது?

மருத்துவர் நிவேதிதா மனோகரன் மற்றும் உத்ரா சிம்ஹன் ஆகியோர் ஆண்களின் மன நலம் தொடர்பாக நிகழ்வு ஒன்றை முன்னெடுக்கின்றனர். குடும்ப வன்முறை தொடர்பில் ஆண்களை எப்படி மாற்றத்திற்கு உட்படுத்தலாம் என்று அவர்கள் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார்: றைசெல்.
8/30/202415 minutes, 7 seconds
Episode Artwork

ATO வரி மோசடி தொடர்பில் விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை!

ஜூன் 30 முதல் myGov வரி மோசடிகளில் 2 மில்லியன் டொலர்களை விக்டோரியர்கள் இழந்துள்ள பின்னணியில் இதுதொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/30/20242 minutes, 21 seconds
Episode Artwork

வீட்டுக்கடன் மீதான நிலையான வட்டி வீதம் குறைப்பு - முழுமையான விவரம்

நாட்டில் உள்ள முக்கியமான மூன்று வங்கிகள் வீட்டுக்கடன் மீதான fixed interest rate நிலையான வட்டி வீதத்தை குறைத்துள்ளன. அதோடு சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன் அட்டை மீதான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன. இதன் பின்னணி என்ன ? இது வீட்டுச்சந்தையில் மாற்றங்களை கொண்டு வருமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி
8/30/202410 minutes, 31 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையே விவாதம்; முக்கிய அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன; இலங்கையில் கடவுச்சீட்டுக்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
8/30/20248 minutes, 3 seconds
Episode Artwork

புற்றுநோய் சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறுகிறது ஒரு புதிய ஆய்வு!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/08/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
8/30/20244 minutes, 53 seconds
Episode Artwork

தாமதமான அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை!

தாமதமான அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ஆஸ்திரேலிய விமானப் பயணிகள் இழப்பீடு பெற வழிவகை செய்யும் புதிய விமான போக்குவரத்து சீர்திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
8/29/20248 minutes, 58 seconds
Episode Artwork

மெல்பன் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம் தொடர்பில் துணை அமைச்சர் Julian Hill தெரிவித்த கருத்து

மெல்பன் Dandenong-இல் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது புகலிடக்கோரிக்கையாளர் தனக்குத்தானே தீவைத்து மரணமடைந்துள்ள பின்னணியில், குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill மனோவின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபரின் விடயத்தில் தன்னால் கருத்துக்கூற முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுவாக சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். அதனை அப்படியே வழங்குகிறோம். SBS பஞ்சாபி நிகழ்ச்சியின் Shyna Kalra-வுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
8/29/20243 minutes, 3 seconds
Episode Artwork

விக்டோரியாவில் Airbnb குறுகிய கால தங்குமிடங்களை பயன்படுத்துபவர்களுக்கு புதிய வரி

விக்டோரியா மாநிலத்தில் விடுமுறையைக் கழிக்க வருபவர்கள் Airbnb போன்ற குறுகிய கால தங்குமிடங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/29/20242 minutes, 19 seconds
Episode Artwork

“சந்தா பொறியில்” மாட்டியுள்ளீர்களா? மாட்டாமல் இருக்க என்ன செய்யலாம்?

சந்தா – Subscription இணைப்பில் இணைவது எளிது; அனால் அதிலிருந்து விலகுவது எளிதா? இப்படியான “சந்தா பொறி” குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Catriona Stirrat. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
8/29/20245 minutes, 49 seconds
Episode Artwork

Superannuation - ஓய்வூதிய நிதி: ஒரு எளிய விளக்கம்

Super Members Council எனும் அமைப்பு ATO எனப்படும் ஆஸ்திரேலிய வரி விதிப்பு அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் ஒரு உண்மையை கண்டறிந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக $1,800 superannuation எனப்படும் ஊதியம் குறைவாக வழங்குவதைக் கண்டறிந்தது. குறிப்பாக பெண்களும், குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு Superannuation சரியாக வழங்கப்படாமல் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த வாரம் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இந்த செய்தியின் பின்னணியில் superannuation எனப்படும் ஓய்வூதிய நிதி குறித்து விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
8/29/202411 minutes, 54 seconds
Episode Artwork

பாராலிம்பிக் போட்டிகள் பாரீசில் கோலாகலமாக துவங்கியது!

செய்திகள்: 29 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
8/29/20244 minutes, 28 seconds
Episode Artwork

கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா?

காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் திருமணத்திற்கு பின் உறவில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமாக உரையாடுகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Educator-ராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
8/28/202411 minutes, 59 seconds
Episode Artwork

மெல்பனில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணம்!

மெல்பனில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து மரணமடைந்ததாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/28/20242 minutes, 24 seconds
Episode Artwork

மெல்பன் சிறுமி அம்ரிதா மரணம் தொடர்பில் மற்றுமொரு விசாரணை ஆரம்பம்!

மெல்பனில் கடந்த 2022ம் ஆண்டு 8 வயதுச்சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தமை தொடர்பில் Coroners Courtஇல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/28/20242 minutes, 45 seconds
Episode Artwork

வெளிநாட்டிலுள்ள பெற்றோரை இங்கு இலகுவாக வரவழைக்க என்ன வழி?

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் வெளிநாடுகளில் வாழும் தமது பெற்றோரை இங்கு நிரந்தரமாக வரவழைத்துக்கொள்ள விரும்பினால், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 30 ஆண்டுகளுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. பல பெற்றோர் தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ள பலர், அரசு இந்நிலைமையை மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்தப்பின்னணியில் பெற்றோரை இலகுவாக ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க என்னென்ன விசாக்கள் உள்ளன என்பது தொடர்பில் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றுபவரும் Shan Lawyers நிறுவனத்தின் இயக்குனருமான திருமலை செல்வி சண்முகம் அவர்களின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/28/202410 minutes, 53 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பணியிட உரிமைகள்: முழுமையான விவரம்

வேலை முடிந்த பின்னர், தங்கள் முதலாளிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் சட்டம் மற்றும் Casual பணியாளர்களுக்கான வரையறை உட்பட இன்னும் சில சட்டங்கள் ஆகஸ்ட் 26ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இப்புதிய சட்டங்களில் உட்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தொழிலாளர் நலன் சார் அமைப்பில் பணிபுரியும் லாவண்யாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
8/28/202411 minutes, 34 seconds
Episode Artwork

சமையலறை non-stick பாத்திரங்கள் பாதுகாப்பானதா? என்ன எச்சரிக்கை தேவை?

நாம் பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்தும் non-stick பாத்திரங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதையும், Nonstick பாத்திரங்களுக்கு மாற்றாக உபயோகிக்கக் கூடிய வேறு வகை பாத்திரங்கள் எவை என்றும் விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/28/20249 minutes, 46 seconds
Episode Artwork

தமிழக பேசுபொருள்: முத்தமிழ் முருகன் மாநாடு

தமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு குறித்த செய்தியின் பின்னணியை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
8/28/20249 minutes, 14 seconds
Episode Artwork

விக்டோரியாவின் தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/08/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
8/28/20244 minutes, 21 seconds
Episode Artwork

Why is sex and sexuality education taught in Australian schools? - SBS Examines : ஆஸ்திரேலிய பாடசாலைகளில் ஏன் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது?

Sex ed in schools is controversial, but experts say it's vital for young people to learn about their bodies, identities, and healthy relationships. Why are some parents concerned? - ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி என்பது முக்கியமானது, ஆனால் அது சீரற்றதாகவும் மற்றும் சர்ச்சைக்குரியதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.
8/26/20246 minutes, 32 seconds
Episode Artwork

CFMEU: அரசின் முடிவுக்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/26/20242 minutes, 56 seconds
Episode Artwork

சிறுமியைக் கொன்று கொள்கலனுக்குள் அடைத்து வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை - NSW நீதிமன்றம் தீர்ப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Charlise Mutten என்ற 9 வயது பள்ளிச் சிறுமியை சுட்டுக் கொன்று, அவரது உடலை கொள்கலனுக்குள் அடைத்து வீசிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/26/20242 minutes, 47 seconds
Episode Artwork

How to protect your home from Australia’s common pests - பீடைகளிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாப்பது எப்படி?

Cold weather does not mean a pest-free home. Some pests, like termites, remain active all-year round and winter is peak season for mice and rats preferring your house instead of outdoors. Bed bugs and cockroaches are also on the list of invaders to look out for. Infestations have wide-ranging consequences, including hygiene risks and even home devaluation. Learn how to prevent, identify, and deal with them. - சிறியளவிலான தொல்லை முதல் உங்கள் சொத்தின் மதிப்பைக் குறைப்பது வரை பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பீடைகள் அல்லது தீங்குயிர்களிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறோம்.
8/26/20248 minutes, 35 seconds
Episode Artwork

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள் - எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு, சீமான் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் அறிவிப்பு, மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சர்ச்சை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
8/26/20249 minutes, 23 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியர்களுக்கான புதிய பணியிட உரிமை இன்று முதல் நடைமுறை!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/08/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
8/26/20244 minutes, 23 seconds
Episode Artwork

மேற்கு ஆஸ்திரேலியாவிலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் பெர்த் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து நேற்று (24 ஆகஸ்ட்) கவனஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து வித்தியாகரன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/25/202411 minutes, 52 seconds
Episode Artwork

சமூக ஊடகங்களூடகவா நீங்களும் நிதி ஆலோசனை பெறுகிறீர்கள்?

இந் நாட்டில் வாழ்பவர்கள் மூவரில் ஒருவர் நிதி ஆலோசனை பெறுவதற்கு சமூக ஊடகங்களை நாடுகிறார்கள் என்றும் அவர்கள் பெறும் தகவலின் நம்பகத்தன்மை மற்றும் அதில் உள்ள அபாயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க கேள்விகள் இருக்கின்றன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
8/24/20247 minutes, 56 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 23 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
8/24/20245 minutes, 15 seconds
Episode Artwork

செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறும் காலம் நெருங்குகிறது!?

பூமியை அடுத்து மனிதன் இன்னொரு கிரகத்தில் வாழ முற்பட்டால் அது நிச்சயம் செவ்வாய் கிரகம் என்றே பல விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். அந்த கனவு சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் நம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த தகவல் குறித்த ஆங்கில மூலம் SBS-Newsக்காக Sydney Lang. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
8/24/20249 minutes, 30 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு இலவச விசா- இலங்கை அரசு அறிவிப்பு

ஆஸ்திரலியா உட்பட 35 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/23/20242 minutes, 17 seconds
Episode Artwork

NSW மாநிலத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Hunter Valley பகுதியில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
8/23/20242 minutes, 5 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: தமிழ் பொது வேட்பாளர் பிரச்சார பணிகளை ஆரம்பித்தார்: தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கைகலப்பு: கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்தில் நீதியான விசாரணை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
8/23/20248 minutes, 13 seconds
Episode Artwork

செங்கடல் பாதுகாப்புப் பணியின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள ஆஸ்திரேலியா!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/08/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
8/23/20244 minutes, 28 seconds
Episode Artwork

குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேன் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து தினூஷன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/22/202410 minutes, 27 seconds
Episode Artwork

ஐரோப்பா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கான புதிய விசா நடைமுறை!

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஆஸ்திரேலியர்கள் விரைவில் புதிய வகையான பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
8/22/20242 minutes, 31 seconds
Episode Artwork

3Gஐ மூடுவது ஏன் தாமதமாகிறது? எந்த அலைக்கற்றை நமக்கு உகந்தது?

ஆஸ்திரேலியாவில் இனி 3G அலைக்கற்றையை நிறுத்திவிடுவதற்கு அரசும் தொலைபேசி நிறுவனங்களும் முடிவு செய்தன. ஆனால் 3G அலைக்கற்றையை நிறுத்திவிட முடிவு செய்தாலும், நிரந்தரமாக மூடும் திட்டம் தொடர்ந்து தாமதமாகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் மெல்பன் நகரில் Data Analystயாக பணியாற்றும் சுரேஷ் பாபு அவர்கள். அவாவ்ர்டு உரையாடியவர்: றைசெல்.
8/22/20249 minutes, 18 seconds
Episode Artwork

Award winning Tamil Coffee Roaster - ஆஸ்திரேலியாவின் முதல் coffee வறுக்கும் தமிழர்!

Aniruth had set up his own roastery in Sydney. His mother, Bamini, longed for the taste of the traditional South Indian filter coffee she had once enjoyed so much. What does Aniruth do? He launches Malgudi Days Coffee. - ஊரில் அருந்தியது போல் ஆஸ்திரேலியாவில் காப்பி அருந்த விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு Malgudi Days Coffee என்ற பெயரில் விடை கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் அனிரூத் மற்றும் அவரது தாயார் பாமினி அவர்களோடு குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
8/22/202412 minutes, 16 seconds
Episode Artwork

அனுமதி இல்லாமல் ஒருவரின் ஆபாசபடத்தை வெளியிட்டால் சிறைத் தண்டனை

செய்திகள்: 22 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
8/22/20244 minutes, 40 seconds
Episode Artwork

மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் திருட்டு: இருவர் கைவரிசை

மெல்பன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தினுள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் புகுந்து, சுமார் 5,000 டாலர்களை உண்டியலுடன் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய மேலதிக விவரங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஷன் பிள்ளை அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். ——————————————————————————————————————- The recent theft at Melbourne's Sri Vakrathunda Vinayagar temple has heightened concerns regarding the security of religious institutions. CCTV footage captures two individuals allegedly breaking into the temple and stealing over $5,000 from the donation box. This incident follows a similar one at the Murugan Temple in Rockbank in western suburb of Melbourne.Listen to this podcast for more details about the incident, as SBS Tamil Praba Maheswaran interviews the temple President Shan Pillai.
8/21/20248 minutes, 53 seconds
Episode Artwork

Incoming Passenger காகித அட்டைகளுக்கு முடிவு கட்டும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் Incoming Passenger Card-உள்வரும் பயணிகள் அட்டையை விரைவில் டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
8/21/20242 minutes, 10 seconds
Episode Artwork

விக்டோரிய காவல்துறையில் இணைவது எப்படி?

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம் இது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றி காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் டினேஷ் நெட்டுர் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
8/21/202420 minutes, 2 seconds
Episode Artwork

சிறு வயதிலிருந்தே சிலம்பத்தின் சிற்பி அதீஸ்ராம் !

தமிழ்நாட்டில், தனது எட்டாம் வயதிலிருந்து சிலம்பக் கலையைக் கற்று, அதில் பல விருதுகளைக் குவித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜெயராமன் அதீஸ்ராம் அவர்களையும், அவருக்கு ஊக்கம் கொடுத்து உறுதுணையாக இருக்கும் அவரது தந்தை நா. ஜெயராமன் அவர்களையும் நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
8/21/202410 minutes, 50 seconds
Episode Artwork

இந்திய பேசுபொருள்: பாலியல் வன்கொடுமை & கலைஞர் நாணயம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மற்றும் கலைஞர் நாணயம் வெளியீடு ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை குறித்த செய்திகளின் பின்னணிகளை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
8/21/20249 minutes, 10 seconds
Episode Artwork

உங்கள் மனைவியைப் பாராட்ட வேண்டிய நேரம்!

பெர்த் நகரில் இயங்கும் SKY மனவளக் கலை மையம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 அன்று மனைவி நல வேட்பு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் அமைப்பாளர்களான கவிதா குப்புசாமி, நீதா ஜெயச்சந்திரன், வேலுசாமி ராமசாமி; மற்றும் பிரபாகர் சின்னத்தம்பி அவர்களின் மையம் பற்றியும் மற்றும் இந்த நிகழ்வு பற்றியும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.
8/21/202411 minutes, 15 seconds
Episode Artwork

ஊதியத்திருட்டு: இலங்கை முன்னாள் துணைத்தூதருக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

கன்பராவில், தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில், இலங்கையின் முன்னாள் துணைத் தூதர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 543,000 டொலர்களை வழங்க வேண்டுமென பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
8/21/20247 minutes, 31 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா - மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/20/20243 minutes, 31 seconds
Episode Artwork

சிட்னியில் பதிவுசெய்யப்படாத வரி முகவராக செயற்பட்டவருக்கு 1.8 மில்லியன் டொலர்கள் அபராதம்!

சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிட்னி நபருக்கு பெடரல் நீதிமன்றம் சுமார் 1.8மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/20/20242 minutes, 2 seconds
Episode Artwork

நாட்டுக்கு வெளியே தடுப்பிலுள்ள 140 பேரையும் விடுவிக்கக்கோரி மனு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/19/20243 minutes, 24 seconds
Episode Artwork

What is genocide? - SBS Examines : இனப்படுகொலை என்றால் என்ன?

'Genocide' is a powerful term — it's been called the "crime of crimes". When does large-scale violence become genocide, and why is it so difficult to prove and punish? - இனப்படுகொலை ஒரு சக்திவாய்ந்த சொல் - உண்மையில் அதன் அர்த்தம் என்ன? ஒரு மோதலை இனப்படுகொலை என்று எப்போது அழைக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது?
8/19/20246 minutes, 38 seconds
Episode Artwork

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை: mpox வைரஸ் ஏற்படுத்திய சுகாதார அவசர நிலை

mpox வைரஸ் பரவுவதை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று WHO அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், இந்த வைரஸ் கவலைக்குரிய ஒரு புதிய திரிபா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அதிகாரிகள் முனைந்துள்ளார்கள்.
8/19/202411 minutes, 5 seconds
Episode Artwork

இந்தியாவை உலுக்கி வரும் பெண் மருத்துவர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்:
8/19/20249 minutes, 21 seconds
Episode Artwork

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதில் மாற்றம் கொண்டுவர புதிய சட்டம்?

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/08/2024) செய்தி.
8/19/20245 minutes, 1 second
Episode Artwork

தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அகதிகள்- புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சனிக்கிழமை (17 ஆகஸ்ட்) தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் அடலைட் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கேதீஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/17/202410 minutes, 14 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 17 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
8/16/20244 minutes, 47 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறக்கூடிய 10 தொழில்துறைகள்

இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஆஸ்திரேலியர்களின் ஊதிய வளர்ச்சி சிறிது குறைந்துள்ள போதிலும்< சராசரி ஆஸ்திரேலிய முழுநேர பணியாளர் வாரத்திற்கு 1923 டொலர்கள் சம்பாதிப்பதாக புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் புதிய தரவு கூறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் எந்தத்துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்ற செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/16/20242 minutes, 56 seconds
Episode Artwork

நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் mpox வைரஸ் தொற்று அதிகரிப்பு!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் mpox எனப்படும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருவதாக NSW Health எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/16/20242 minutes, 1 second
Episode Artwork

Tax impact: What happens when 'work-from-home' ends? - வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வருவது Taxயில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

Leader of the Opposition, Peter Dutton, has proposed offering tax concessions to those living in non-urban areas. Meanwhile, some states, including NSW, have requested that civil servants abandon working from home and return to the office. Armstrong, a certified Chartered Accountant in Australia with over two decades of experience in audit and taxation, analyses both issues." Produced by RaySel. - நகரம் அல்லாத இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு வரிச் சலுகை (Tax concession) வழங்கலாம் என்று எதிர்கட்சித் தலைவர் Peter Dutton அவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். மேலும் NSW உள்ளிட்ட சில மாநிலங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை கைவிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகம் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த செய்திகள் குறித்து ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
8/16/20249 minutes, 53 seconds
Episode Artwork

Embracing the wisdom of traditional Indigenous medicine - பூர்வீக குடிமக்களின் மருத்துவ ஞானத்தை நாம் எப்படி பயன்படுத்தலாம்?

Understanding and respecting Indigenous knowledge of medicine may be the key to providing more holistic and culturally sensitive care in today's healthcare setting. - மருத்துவம் பற்றிய பூர்வீகக் குடிமக்களின் அறிவைப் புரிந்து கொள்வதும் மதிப்பதும் இன்றைய சுகாதாரக் கட்டமைப்பில் மிகவும் முழுமையான மற்றும் கலாச்சார ரீதியாக உணர் திறன் கொண்ட பராமரிப்பை வழங்குவதற்கான திறவுகோலாக அமையலாம். ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், பூர்வீகக் குடி மக்களின் பாரம்பரிய மருத்துவத்தைப் புரிந்து கொள்வதும் மதிப்பதும் இன்றைய சுகாதார அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை எவ்வாறு வழங்கக் கூடும் என்பதை ஆராய்வோம். Yumi Oba ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
8/16/202410 minutes, 21 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழ்தரப்புக்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ள வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான ஏனைய செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
8/16/20248 minutes, 22 seconds
Episode Artwork

"காஸாவில் நடப்பது மனிதக் கொலையின் மிக மோசமான மைல்கல்" - ஐநா

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/08/2024) செய்தி.
8/16/20244 minutes, 3 seconds
Episode Artwork

பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து பிரிஸ்பேன் கற்கவேண்டிய பாடம் என்ன?

பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் எப்படி இருக்கும் என்பதை வடிவமைக்கத் தொடங்கும் போது, விளையாட்டு அமைப்பாளர்கள் பாரிஸ் 2024 போட்டிகளிலிருந்து என்னவெல்லாம் எடுத்துக்கொள்வார்கள் அல்லது தவிர்ப்பார்கள்? அலசுகிறார் கன்பராவிலுள்ள விளையாட்டு ஆர்வலர் வெங்கடாசலம் ஜெகநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
8/16/202410 minutes, 2 seconds
Episode Artwork

தவறுதலாக வைப்புச்செய்யப்பட்ட பணத்தைக் கையாடிய வழக்கு: இந்தியருக்கு சிறை

கிரிப்டோ நிறுவனம் தவறுதலாக வைப்புச்செய்த பணத்தை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜதீந்தர் சிங்கிற்கு விக்டோரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/15/20242 minutes, 44 seconds
Episode Artwork

நாட்டில் எத்தனைபேர் பிறரின் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொண்டனர் தெரியுமா?

கருணைக்கொலை சட்டம்- voluntary assisted dying அதாவது மற்றொருவர் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சட்டத்தைப் பயன்படுத்தி நாடுமுழுவதும் இதுவரை 2460 பேர் இறந்துள்ளதாக புதிய தரவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/15/20242 minutes, 37 seconds
Episode Artwork

இளமை-பெற்றோர்-முதுமை: வாழ்வு தரும் பாடம் என்ன?

தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு “முதுமை” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
8/15/20249 minutes, 28 seconds
Episode Artwork

Left-handers have higher IQ - இடதுகை பாவனையாளர்கள் அதீத புத்திசாலிகள்!!

August 13th is International Left-handers Day. Our presenter Kulasegaram Sanchayan talks to a practicing Consultant psychiatrist, Shanti Paramesvaran, on left-handedness; and with some of our listeners, Gnanam, Murthy and his wife Logi, Malini and her daughter Prashanthy who are all, you guessed it, left-handers. - இடதுகை பாவனையாளர்களை கௌரவிக்கும் சர்வதேச நாள், ஆகஸ்து 13ம் நாள். இன்றைய இடது கைப் பாவனையாளருக்கான சர்வதேச நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், மனோதத்துவ நிபுணராகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் Dr சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன், இடது கைப் பாவனையுள்ள நேயர்கள் ஞானம், மூர்த்தி - லோகி தம்பதியினர், மாலினி அவர் மகள் பிரஷாந்தி ஆகியோரது அநுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்..
8/15/202421 minutes, 5 seconds
Episode Artwork

What is 'social cohesion', and can it be measured? - 'சமூக ஒற்றுமை' என்றால் என்ன, அதை அளவிட முடியுமா?

You've heard the term a lot... social cohesion. But what does it actually mean? And can it be measured? - சமூக ஒற்றுமை என்ற சொல்லை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன? அதை அளவிட முடியுமா? என்று சிந்தித்திருக்கிறீர்களா?
8/15/20246 minutes, 19 seconds
Episode Artwork

உலகின் முதல் டிஜிட்டல் அடையாள முறை ?

இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் ஒரு புதிய டிஜிட்டல் அடையாள முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று அறிவித்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலியர்களும் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை ஒப்படைப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் டிஜிட்டல் அடையாள முறையைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
8/15/20249 minutes, 15 seconds
Episode Artwork

'வெறுக்கத்தக்கது': தப்பி வரும் பாலஸ்தீனியர்களைத் தடை செய்ய பீட்டர் டட்டனின் அழைப்புக்கு கண்டனங்கள்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/08/2024) செய்தி.
8/15/20244 minutes, 14 seconds
Episode Artwork

போர் நிலத்து அகதிகள் ஆஸ்திரேலியாவிற்குள் வேண்டாம்- டட்டன்

போர் நிலமாக மாறியுள்ள காசாவிலிருந்து வரும் பலஸ்தீனியர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/14/20242 minutes, 16 seconds
Episode Artwork

10 வயது மகளை கொலைசெய்த குற்றச்சாட்டில் தாய் கைது! குயின்ஸ்லாந்தில் சம்பவம்!!

குயின்ஸ்லாந்து மாநிலம் கோல்ட் கோஸ்டில் தனது 10 வயது மகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 46 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/14/20242 minutes, 36 seconds
Episode Artwork

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமைச்சரின் பதில்!

NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புதிய குடிவரவு அமைச்சர் Tony Burke அவசரமாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
8/14/20244 minutes, 29 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மின்சாரம் ஏற்றுமதி!

ஆஸ்திரேலியா சிங்கப்பூருக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் தயாராகும் மின்சாரம் எப்படி, எப்போது சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/14/20249 minutes, 39 seconds
Episode Artwork

இந்திய பேசுபொருள்: பங்களாதேஷ் சிறுபான்மையினர் & அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை

இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை விவகாரம் மற்றும் பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த செய்திகளின் பின்னணிகளை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
8/14/20247 minutes, 55 seconds
Episode Artwork

Can a funeral be held at home in Australia? - ஆஸ்திரேலியாவில் இறுதி சடங்கை வீட்டில் நடத்தலாமா?

Holding a warm, intimate funeral at home can provide a unique opportunity to honour and say goodbye to loved ones in a personal and meaningful way. In Australia, however, there are specific legal requirements to consider when planning a home funeral. - ஒரு அன்பான, நெருக்கமான இறுதிச் சடங்கை வீட்டில் நடத்துவதன் மூலம், தங்கள் அன்புக்குரியவர்களை தனிப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள விதத்தில் கௌரவித்து விடை கொடுக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்க முடியும்.
8/14/202412 minutes, 31 seconds
Episode Artwork

சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை வருமா?

உங்கள் மனதை, சூதாட்டம் எவ்வாறு பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
8/14/20249 minutes
Episode Artwork

மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாசிப்பு, கணிதத்தில் பின்னடைவு - NAPLAN

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/13/20243 minutes, 27 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவின் எந்த இடங்களில் வீடுகள் மிக வேகமாக விற்பனையாகின்றன?

நாட்டில் வீடுகள் வேகமாக விற்பனையாகும் இடங்களின் பட்டியலில் மேற்கு ஆஸ்திரேலிய புறநகர்கள் பெரும்பாலான இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் பட்டியலை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/13/20243 minutes, 1 second
Episode Artwork

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களைப் பிடிக்க தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கமராக்கள்

வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கான கமராக்கள், தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் பாவனைக்கு வந்துள்ள பின்னணியில், இதில் அகப்படுபவர்களுக்கு அடுத்த மாதம் முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
8/13/20242 minutes, 16 seconds
Episode Artwork

சூதாட்ட விளம்பரங்களைத் தடை செய்ய Greens வலியுறுத்தல்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/12/20243 minutes, 24 seconds
Episode Artwork

ஒலிம்பிக் 2024 : சாதனைகள், சவால்கள், பெருமைகள்

ஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. பாரீஸ் நகர குடியிருப்பாளரும் ஊடகவியலாளருமான வாசுகி குமாரதாசன் அவர்கள் இந்தப் போட்டிகள் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.
8/12/202413 minutes, 15 seconds
Episode Artwork

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் - ஆதரவும் - எதிர்ப்பும், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - இந்திய முழுவதும் மருத்துவர்கள் போராட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுள்ளதா? மற்றும் சென்னையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
8/12/20248 minutes, 54 seconds
Episode Artwork

"எங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்"

NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புதிய குடிவரவு அமைச்சர் Tony Burke அவசரமாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
8/12/202410 minutes, 15 seconds
Episode Artwork

ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாள்: சாதனை படைத்தது ஆஸ்திரேலியா

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/08/2024) செய்தி.
8/12/20243 minutes, 59 seconds
Episode Artwork

Is your child being bullied at school or online? Key steps you need to take - பாடசாலையில் அல்லது இணைய வழியாக உங்கள் குழந்தை கொடுமைப்படுத்தப்படுகிறதா? என்ன செய்யலாம்?

Experts say that dealing with bullying behaviours is never easy but always necessary, as the harm caused can impact children for years. To provide up-to-date advice on supporting a child experiencing bullying at school or online, we consult specialists in education, psychology, and cyberbullying response. - பாதுகாப்பான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வழங்குவது ஒவ்வொரு ஆஸ்திரேலிய பாடசாலையின் பணியாகும். ஆனால், ஒரு பாடசாலையில் ஒரு குழந்தை கொடுமைப் படுத்தப்பட்டால் அதன் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த கொடுமைப் படுத்தல் இணைய வழியாக நடந்தால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, கல்வி, உளவியல் மற்றும் இணைய வழி கொடுமைப் படுத்தப் படுதல் ஆகியவற்றில் உதவி வழங்கும் நிபுணர்களிடம் ஆலோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளைக் கேட்டறிந்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
8/11/20249 minutes, 29 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 10 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
8/9/20244 minutes, 24 seconds
Episode Artwork

Sydney's Tamil Safe Space: A Community oasis - சிட்னியில் “தமிழ் பாதுகாப்பு இடம்”

Tamil Safe Space (TSS), an initiative by Tamils living in Sydney, was launched on Saturday, August 3, 2024, in Wentworthville, NSW. Tamil Safe Space offers a free drop-in environment for Tamil community members facing emotional distress or suicidal crisis, where they can receive support from trained Tamil peer support volunteers. The space aims to provide individuals in distress an alternative to emergency departments, offering non-clinical and culturally safe support to help alleviate their distress. - சிட்னியில் வாழும் தமிழர்களின் முயற்சியாக “தமிழ் பாதுகாப்பு இடம்” (Tamil Safe Space) எனும் முன்னெடுப்பு கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 3, 2024) சிட்னியின் Wentworthville எனுமிடத்தில் தொடங்கப்பட்டது. தமிழ் பாதுகாப்பு இடம் என்பது துயரத்தில் இருக்கின்றவர்களுக்கு ஆதரவும், பாதுகாப்பு வழங்கும் முயற்சியாகும். இந்த முன்னெடுப்பு குறித்து மருத்துவர் ஐங்கரனாதன் செல்வரத்தினம், கல்யாணி இன்பகுமார் மற்றும் மருத்துவர் தவசீலன் ஆகியோர் விளக்குகின்றனர்.
8/9/202413 minutes, 20 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை என்பதாலேயே சர்வதேச விசாரணை கோரி போராடுகின்றோம் என்று காணாமல்போனோரின் உறவுகள் சங்கம் கூறும் செய்தி, சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல் களம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
8/9/20248 minutes, 20 seconds
Episode Artwork

Feeling Lonely? You are not alone! - நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை!

Australia's Loneliness Awareness Week is observed from 5th to 11th August. Kulasegaram Sanchayan presents a program with comments from Devakie Karunagaran, a Sydney-based Tamil writer. - ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் தனிமை விழிப்புணர்வு வாரம் அவதானிக்கப்படுகிறது. அது குறித்து, சிட்னியில் வாழும் எழுத்தாளர் தேவகி கருணாகரன் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
8/9/202411 minutes, 35 seconds
Episode Artwork

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தடகள ஆணையத்திற்கு Jess Fox தேர்வு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/08/2024) செய்தி.
8/9/20244 minutes, 37 seconds
Episode Artwork

மெல்பனில் பரவிய லீஜினேயரிஸ் நோய் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மெல்பனில் லீஜினேயரிஸ் நோயின் பரவல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் அதற்குக் காரணமாகக் கருதப்படும் ஒரு குளிரூட்டும் கோபுரம் தற்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீஜினேயரிஸ் நோய்ப் பரவல் பற்றிய பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
8/9/20249 minutes, 5 seconds
Episode Artwork

Tamil poet honoured with Singapore’s highest cultural award - சிங்கப்பூரின் அதியுயர் இலக்கிய விருது பெற்ற தமிழர்

Singaporean poet and writer K.T.M. Iqbal was awarded the country’s highest cultural award Cultural Medallion, by President Tony Tan Keng Yam last week. The Tamil poet of Indian-origin who has written over 200 poems for children, and much more on love, life, and nature. - சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள்.
8/8/202425 minutes, 19 seconds
Episode Artwork

மனிதம்: அப்டீன்னா என்ன?

தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மனிதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
8/8/20248 minutes, 54 seconds
Episode Artwork

நீங்கள் இறந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நம் வாழ்வில் மிகவும் உறுதியாக நடக்கும் ஒரு விடயம் என்றால் மரணம்தான். இளையோர் முதியோர் ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் அனைவரும் இறுதியில் சந்திப்பது மரணத்தைத்தான்.
8/8/20248 minutes, 46 seconds
Episode Artwork

சட்டத்தின் கைகளில் Google ஆதிக்கம் ஆட்டம் காண்கிறதா?

அதன் ஆதிக்கத்தைப் பயன் படுத்தி, கூகுளின் தேடு பொறி (Google Search Engine) அதற்குப் போட்டியாக இருக்கும் செயலிகளையும் மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப் படுவதையும் தடுக்க சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட்டது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
8/8/202410 minutes, 31 seconds
Episode Artwork

UKஐ உலுக்கிய வன்முறை கலவரம்: ஆஸ்திரேலிய பயணிகளுக்கு எச்சரிக்கை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/08/2024) செய்தி.
8/7/20244 minutes, 57 seconds
Episode Artwork

தமிழக பேசுபொருள்: உள் இட ஒதுக்கீடு & சாதி கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீடு சாத்தியமாவது குறித்தும், சாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்ற கோரிக்கை வலுப்பெறுவது குறித்தும் செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக தகவல்களை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
8/7/20249 minutes, 15 seconds
Episode Artwork

இசையை ஒரு பாடமாகக் கற்பது மற்றைய பாடங்களில் கவனம் செலுத்த உதவுமா?

NSW மாநில பாடசாலைகளில் கலை மற்றும் இசை ஒரு பாடமாகப் போதிக்கப்படுவது குறித்தும் அதற்கான பயிற்சி பற்றியும் மாநில நாடாளுமன்ற விசாரணை நடந்து வருகிறது.
8/7/202410 minutes, 55 seconds
Episode Artwork

பங்களாதேஷ் பிரதமர் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற பின்னணியும், அரசியல் நகர்வுகளும்!

பங்களாதேஷ் நாடு தற்போது சந்திக்கும் அரசியல் நெருக்கடி குறித்தும், பிரதமர் ஷேக் ஹசினா ஏன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்ற அரசியல் பின்னணி குறித்தும், எதிர்கால அரசியல் குறித்தும் அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
8/6/202413 minutes, 18 seconds
Episode Artwork

விக்டோரியாவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/6/20243 minutes, 33 seconds
Episode Artwork

A Mother's Heartfelt Plea: “Please bring my son home” - ஒரு தாயின் உருக்கமான வேண்டுகோள்: “எனது மகனைக் கண்டிபிடித்துத் தாருங்கள்”

Krishank Karthik (Krish for short) a 11th grade student at Suzanne Cory High School, Werribee, Victoria, has not returned home since yesterday, and his mother Shobana Karthik is making a fervent plea for his return. - மெல்பன் நகரின் புறநகர் Werribeeயிலுள்ள Suzanne Cory High School என்ற அரச பாடசாலையில் 11ஆம் வகுப்பு மாணவன் க்ருஷாங்க் கார்த்திக் (Krishank Karthik, சுருக்கமாக Krish) நேற்றிலிருந்து வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் அவரது தாயார் ஷோபனா கார்த்திக் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
8/6/20246 minutes, 31 seconds
Episode Artwork

உடல் எடையை குறைக்க புதிய மருந்து - Wegovy தற்போது மருந்தகங்களில் கிடைக்கிறது!

நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் Ozempic மருந்து போன்று உடல் எடையை குறைக்கும் மருந்து தற்போது மருந்தகங்களில் கிடைக்கிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/6/20242 minutes, 14 seconds
Episode Artwork

அமெரிக்காவிற்கு அடிக்கடி செல்லும் ஆஸ்திரேலியர்களின் பயணம் எளிதாகிறது!

அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வரும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய மாற்றம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/6/20242 minutes, 14 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு அதிகரிப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/08/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
8/5/20243 minutes, 6 seconds
Episode Artwork

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் மட்டுமே!

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்துகளில் 50 சதம் கட்டணம் பரிசாட்திய திட்டம் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/5/20241 minute, 53 seconds
Episode Artwork

ரிசர்வ் வங்கி வட்டிவீத உயர்வை நிறுத்தி வைக்குமா? நாளை தெரியும் விடை!

இன்று தொடங்கும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் (RBA) கூட்டத்தில் வட்ட வீதம் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை நாட்டில் வீட்டு கடன் வைத்திருக்கும் கோடிக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/5/20241 minute, 44 seconds
Episode Artwork

These simple tips can help you with good Dental Care - பல் பராமரிப்பிற்கு உதவும் எளிய குறிப்புகள்

This Dental Health Week (5-11th August), the Australian Dental Association is urging people to prioritise their gum health by booking in with their dentist and checking their gum disease factsheet. To keep gum disease, tooth decay and serious whole-of-body health conditions away, learn more oral health tips at teeth.org.au. - பல் சுகாதார வாரம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பல் மருத்துவரிடம் முன் பதிவு செய்து, ஈறு நோய் பற்றி அறிந்து கொள்ளுமாறும், ஈறு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஆஸ்திரேலிய பல் மருத்துவ சங்கம் மக்களை வலியுறுத்துகிறது. ஈறு நோய், பல் சிதைவு மற்றும் தீவிர உடல் ஆரோக்கிய நிலைகளை விலக்கி வைக்க, இன்னும் கூடுதலான வாய்வழி சுகாதார உதவிக் குறிப்புகளை teeth.org.au என்ற இணையத்தளத்தில் பெறலாம்.
8/5/202412 minutes, 5 seconds
Episode Artwork

ஒலிம்பிக் 2024 : துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவிற்குப் பதக்கம்

ஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாரிஸ் நகர குடியிருப்பாளரும் ஆர்வலருமான சிவகுமார் பொன்னுத்துரை இந்தப் போட்டிகள் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.
8/5/20249 minutes, 49 seconds
Episode Artwork

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 340-கும் மேற்பட்டோர் பலி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்;
8/5/20248 minutes, 48 seconds
Episode Artwork

“Closing the Gap” செயல் திட்டத்தின் நிலைக்கு இரு பெரும் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்

Closing the Gap என்று பெயரிடப்பட்ட செயல் திட்டம், அதன் இலக்குகளை நோக்கி அரசின் செயல் திட்டங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளன என்று, Productivity Commission அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
8/5/20249 minutes, 19 seconds
Episode Artwork

ரஷ்யா படையெடுத்து 29 மாதங்களுக்கும் பின்னர், யுக்ரேனில் F-16 போர் விமானங்கள்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/08/2024) செய்தி.
8/5/20243 minutes, 52 seconds
Episode Artwork

சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு வீடு இல்லை - தடை விதிக்கும் நகரம்

நவம்பர் 2028-இல் , தற்போது குறுகிய கால வாடகையாக அங்கீகரிக்கப்பட்ட 10,101 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமங்களை பார்சிலோனா ரத்து செய்யவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/4/20241 minute, 57 seconds
Episode Artwork

மெல்பனில் legionnaires' நோயால் ஒருவர் மரணம் - தொற்று பரவலுக்கு என்ன காரணம்?

மெல்போர்னில் legionnaires' நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/4/20242 minutes, 26 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 3 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
8/2/20245 minutes, 7 seconds
Episode Artwork

இந்தியாவிற்கான விமானக் கட்டணம் குறைகிறது - காரணம் என்ன?

கடந்த ஆண்டை விட சராசரியாக 13 சதவீதம் விமானக் கட்டணம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல பிரபலமான இடங்களுக்கு விலைகள் குறைந்து வருவதாகவும் புதிய தரவு காட்டுவதாக Flight Centre Australia கூறுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
8/2/20242 minutes, 26 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிபர் தேர்தல் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றன; வடக்கு கிழக்கில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள் நடைபெற்றன; தமிழ் வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு கலந்துரையாடல் என்ற பல செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
8/2/20248 minutes, 31 seconds
Episode Artwork

Good reasons to observe the pedestrian road rules - கால்நடையாக சென்றாலும் சாலை விதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

Every day, pedestrians across Australia break the law without knowing it. This can result penalties and occasionally accidents. Stay safe and avoid an unexpected fine by familiarising yourself with some of Australia’s common pedestrian laws. - நாடு முழுவதும், ஒவ்வொரு நாளும், கால்நடையாக செல்பவர்களும் தங்களை அறியாமல் சட்டத்தை மீறுகிறார்கள். இதற்கு அபராதம் கட்ட வேண்டி வருவது ஒரு புறம் இருக்க, சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கலாம். கால்நடை செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம், அத்துடன் எதிர்பாராத அபராதத்தைத் தவிர்க்கலாம்.
8/2/20249 minutes, 25 seconds
Episode Artwork

பனிப் போருக்குப் பின் ரஷ்யாவுடன் நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/08/2024) செய்தி.
8/2/20243 minutes, 58 seconds
Episode Artwork

What Are the Effects of Social Media on Seniors? - சமூக வலைத்தளங்களும் முதியவர்களும்

Social media have become prominent parts of life for many people today. Most people engage with social media without stopping to think what the effects are on our lives, whether positive or negative. This feature talks about the impact of social media on seniors. - பொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு முதியவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
8/1/202415 minutes, 8 seconds
Episode Artwork

What Are the Effects of Social Media on Seniors? - சமூக வலைத்தளங்களும் முதியவர்களும்

Social media have become prominent parts of life for many people today. Most people engage with social media without stopping to think what the effects are on our lives, whether positive or negative. This feature talks about the impact of social media on seniors. - பொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு முதியவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
8/1/202414 minutes, 51 seconds
Episode Artwork

புதிய Workplace Justice விசா புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்குமா?

ஆஸ்திரேலியாவிற்கு Work visa-வில் பணி செய்ய வருபவர்கள் பணியிட சுரண்டலுக்கு ஆளாகும்போது அவர்களுக்கென Workplace Justice விசா என்றொரு புதிய விசா ஒன்றை அரசு கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
8/1/20248 minutes, 59 seconds
Episode Artwork

What is the actual reason for the White House to honour Prof. Sivalingam Sivananthan - வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன?

Born in Chavakacheri, Sri Lanka, Prof. Sivalingam Sivananthan is a world-renowned physicist as well as a successful entrepreneur in creating advanced military infrared night vision technology, which has also served as the platform for ground-breaking, next generation solar cells. He was recently recognised by the White House as a "Champion of Change" – one of the best and brightest from around the world who are helping create American jobs, grow our economy, and make our nation more competitive. - அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்த பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
8/1/202427 minutes, 19 seconds
Episode Artwork

கட்டாயத் திருமணம் செய்து வைத்த தாய்க்கு சிறை தண்டனை!

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் சட்ட விரோதமானது. விக்டோரியா மாநிலத்தில் கட்டாயத் திருமணம் செய்ய காரணமாக இருந்த ஒருவருக்கு முதல் முறையாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து SBS News-இற்காக Rayane Tamer ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
8/1/20246 minutes, 58 seconds
Episode Artwork

ஹமாஸின் அரசியல் தலைவர் ஈரானில் படுகொலை!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 01/08/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
7/31/20244 minutes, 7 seconds
Episode Artwork

The risks of not getting the flu vaccine - Flu – காய்ச்சல் தடுப்பூசி போடாமலிருந்தால் என்ன நடக்கும்?

Despite widespread recommendations for flu vaccination, recent statistics reveal a significant decline in vaccination rates across the country. Dr. Shanthini Thavaseelan, a general practitioner and specialist in women's health in NSW discusses the factors contributing to this trend, potential solutions to address it, and the benefits of getting vaccinated. Produced by RaySel. - Flu - காய்ச்சல் வராமலிருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இதற்கான காரணம் என்ன, அதை எப்படி போக்குவது, தடுப்பூசி போடுவதன் நன்மைகள் என்ன என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
7/31/20248 minutes, 46 seconds
Episode Artwork

Tap-water review due to cancer-causing chemical fears - 'not to worry' - நாட்டிலுள்ள குடிநீரில் புற்றுநோய் chemicals? - 'கவலை வேண்டாம்'

News reports warned Australians that substances known as "forever chemicals" have been found in drinking water supplies around our country. Dr Para Parameshwaran is a Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminants of emerging concern and membrane technology for water and wastewater treatment and he urges people to not to worry. Segment produced by Praba Maheswaran. - ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள குடிநீர் நிலைகளில் “forever chemicals” என்று அறியப்படும் வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது பாதுகாப்பற்ற நிலைகளைத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய உண்மை நிலைமையினை அறியும் நோக்குடன் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் தொடர்பில் அனுபவம் வாய்ந்த Process Engineer கலாநிதி பரா பரமேஸ்வரன் (Process Engineer experienced in the areas of Wastewater Pollution source control, contaminats of emerging concern and membrane technology for water and wastewater treatment) அவர்களுடன் உரையாடினோம். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.
7/31/202411 minutes, 58 seconds
Episode Artwork

அகதிகள் ஒலிம்பிக் அணி என்றால் என்ன, அதில் யார் இருக்கிறார்கள்?

International Olympic Committee IOC-ஆல் உருவாக்கப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறது அகதிகள் ஒலிம்பிக் குழு. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/31/20242 minutes, 7 seconds
Episode Artwork

கேரளா வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்; இழப்பு தொடர்கிறது. மேலும், இந்தியாவின் சிறுபான்மை மக்கள் குறித்த தகவல் என்று செய்தியின் பின்னணிகளை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
7/31/20247 minutes, 42 seconds
Episode Artwork

Selective School: மாணவர்கள் அங்கு செல்வதால் உண்மையில் பயன் இருக்கிறதா?

புலம்பெயர்ந்து இங்கு குடி வந்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, பொது பாடசாலைகளுக்கு அனுப்புவதை விட, selective school எனப்படும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
7/31/202410 minutes, 26 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற உங்கள் நண்பர் யார் என்பது முக்கியம்!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது நமக்கு தெரிந்த ஒருவர் நம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த நடைமுறை பற்றியும் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றியும் செல்வியுடன் உரையாடுகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள்.
7/31/20249 minutes, 56 seconds
Episode Artwork

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய விசா அறிமுகம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 31/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
7/30/20243 minutes, 10 seconds
Episode Artwork

அடிலெய்டில் ஒரே மாதத்தில் மொபைல் பாவித்த 31,000 வாகனம் ஓட்டுநர்களை படம் பிடித்த கமரா!

தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் நிறுவப்பட்ட மொபைல் பாவனையை கண்டறியும் புதிய கமராக்கள், நிறுவப்பட்ட ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 31,000 வாகன ஓட்டிகள் தொலைபேசியைப் பயன்படுத்துவதைப் படம் பிடித்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/30/20242 minutes, 11 seconds
Episode Artwork

இத்தாலியை சுற்றி பார்க்கும் போது கையில் பாஸ்போர்ட் இல்லையெனில் $3000 அபராதம்!

இத்தாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லும்போது எல்லாம் எப்போதும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவில்லை என்றால் சுமார் 3000 டாலர்கள் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/30/20242 minutes, 13 seconds
Episode Artwork

ஆஸ்திரேலிய இந்திய ஜப்பானிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
7/30/20243 minutes, 34 seconds
Episode Artwork

ஒலிம்பிக் 2024 : முதல் நாளே பதக்கம் வென்றது ஆஸ்திரேலியா

ஃபிரான்சில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் ஆரவாரத்துடன் தொடங்கியது. பாரிஸ் நகர குடியிருப்பாளரும் ஆர்வலருமான சிவகுமார் பொன்னுத்துரை இந்த நிகழ்வைப் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் விவரிக்கிறார்.
7/29/202410 minutes, 15 seconds
Episode Artwork

கொன்று அழிப்போம் எனப்பட்ட ஆடுகள் மில்லியன்கள் சம்பாதிப்பது எப்படி?

ஆஸ்திரேலியாவில் feral goats என்ற காட்டு ஆடுகளைக் கொன்று அழித்த நிலை மாறி, அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதன் மூலம் மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காட்டாடுகள் எப்படி பிடிக்கப்படுகின்றன? எப்படி ஏற்றுமதி செய்யப்படுகின்றன? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
7/29/20249 minutes, 16 seconds
Episode Artwork

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

கடந்து சென்ற சில நாட்களில் இந்தியாவில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி.
7/29/20248 minutes, 59 seconds
Episode Artwork

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா?

சமீபத்திய Henley Passport குறியீட்டின்படி, ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு பயணிக்கும் போது வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/29/20242 minutes, 14 seconds
Episode Artwork

மருத்துவ பொருளின் தட்டுப்பாடு ஆஸ்திரேலிய நோயாளிகளை பாதிக்குமா?

உலகளாவிய Saline உப்பு கரைசலின் பற்றாக்குறை ஆஸ்திரேலிய மருத்துவ சுகாதார அமைப்பை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை இது பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
7/29/20247 minutes, 56 seconds
Episode Artwork

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்குமாறு கோரிக்கை – நிராகரித்தது அரசு!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/07/2024) செய்தி.
7/29/20244 minutes, 5 seconds
Episode Artwork

Understanding Australia’s legal system: laws, courts and accessing legal assistance - இந்த நாட்டின் சட்ட அமைப்பைப் புரிந்து கொள்வோம்: சட்டங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இலவச சட்ட உதவி

Are you familiar with Australia’s legal system? As a federation of six states and two territories, Australia has laws that apply nationally, as well as laws specific to each jurisdiction. Additionally, there are parallel structures of federal and state courts. Learn the basics of how the legal system works, from understanding Australian laws to accessing legal assistance. - ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு ஒழுங்கை பராமரிக்கவும், நீதியை உறுதிப்படுத்தவும் மற்றும் அதன் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான கட்டமைப்பாகும். ஒரு கூட்டாட்சியாக, ஆஸ்திரேலியா ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு பிரதேசங்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசாங்கம், சட்டமன்றம் மற்றும் நீதிமன்ற அமைப்புகளுடன் காமன்வெல்த் (கூட்டாட்சி) கட்டமைப்புகளுடன் செயல் படுகிறது. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், நம் நாட்டில் சட்ட அமைப்பு எவ்வாறு செயல் படுகிறது, மற்றும் சட்ட உதவிகளை எவ்வாறு அணுகலாம் என்று Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
7/28/20249 minutes, 59 seconds
Episode Artwork

இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிப்பு

இலங்கையின் 9ஆவது அதிபர் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
7/28/20244 minutes, 55 seconds
Episode Artwork

Captivating Tamil audience: 'Kaimanam' and 'Penn' hit Sydney stage - இளைய தலைமுறையின் “கைமணம்”, முதல் தலைமுறையின் “பெண்”!

Sydney Nadaga Priya is staging two plays, “Kaimanam” and “Pen,” on August 3 (Saturday) at 6 p.m. at the Redgum Function Centre, 14 Lane Street, Wentworthville, NSW. For more information, contact Jaishree Shankar at 0410 169 112. - சிட்னி நாடகப்பிரியா அமைப்பு “கைமணம்”, “பெண்” எனும் இரு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றுகிறது. இந்நாடகங்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு NSW மாநிலத்தில் Wentworthville, 14 Lane Street, Redgum Function Centre எனுமிடத்தில் அரங்கேறுகிறது. இது குறித்த அதிக தகவலுக்கு ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களை 0410 169 112 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
7/27/202410 minutes, 16 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 27 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
7/26/20244 minutes, 38 seconds
Episode Artwork

Is immigration worsening the housing crisis? - குடிவரவு வீட்டு நெருக்கடியை மோசமாக்குகிறதா?

Australia's facing a worsening housing crisis. At the same time, the number of overseas migrant arrivals is at its highest ever since records began. Is increased migration driving up housing and rental prices? - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவிற்கான குடிவரவு எழுபத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. நாங்கள் மோசமான வீட்டு நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம். எனவே குடிவரவு வீட்டு விலைகளை உயர்த்துகிறதா? விளக்குகிறது இந்த விவரணம். SBS Examines-இற்காக Olivia Di Iorio எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
7/26/20245 minutes, 25 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது; தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
7/26/20247 minutes, 59 seconds
Episode Artwork

சிட்னியில் வீடு வாங்குவது அடுத்த பத்து ஆண்டுகளுக்குக் கட்டுபடியாகாது

சிட்னி பெருநிலப்பரப்பில் அடுத்த பத்தாண்டுகள் வரை சராசரி வருமானம் உள்ள எவருக்கும் வீடொன்றினை வாங்குவது கட்டுப்படியாகாது என்று ஒரு ஆய்வு கணித்துள்ளது. இதன் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் Winning Loans நிறுவன இயக்குனர் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
7/26/20247 minutes, 22 seconds
Episode Artwork

இரு அமைச்சர்கள் பதவி விலகல் - புதிய அமைச்சரவையை அறிவிக்க தயாராகும் பிரதமர்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/07/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
7/25/20244 minutes, 27 seconds
Episode Artwork

இந்தியாவில் உள்ள பிள்ளைகளை அழைத்து வர 12 ஆண்டுகளாக காத்திருக்கும் பெற்றோர்

இந்தியாவில் விட்டுவிட்டு வந்த தங்களது மகள் மற்றும் மகனை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர 12 ஆண்டுகளாக காத்திருக்கும் தம்பதியினர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/25/20241 minute, 59 seconds
Episode Artwork

How to resolve neighbourhood disputes? - அயலவருடனான பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி?

What are all the neighbourhood disputes and how do you resolve them? Lawyer Ganakaran explains - ஆஸ்திரேலியாவில் அயலவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
7/25/202411 minutes, 2 seconds
Episode Artwork

Let’s save the Tigers - புலிகளைக் காப்பாற்றுவோம்

Human activities - especially poaching and deforestation have brought the tiger population to near extinction. Since 2010, International Tiger Day has been celebrated on July 29 to create awareness on the importance of Tigers to the Eco System. - மனித செயல்பாடுகளின் காரணமாக - குறிப்பாக வேட்டையாடுதல், வழிப்பாதைகளுக்காகக் காடுகளை அழித்தல் போன்றவற்றால் புலி இனம் அழியும் நிலை ஏற்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 2010ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29ஆம் நாள் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
7/25/202419 minutes, 50 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் ஆலிவ் எண்ணெய் விலை வேகமாக அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் ஆலிவ் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? எப்போது விலை குறையும்? அதுவரை எப்படி சமாளிக்கலாம்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Alex Anyfantis மற்றும் SBS On The Money இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
7/25/20247 minutes, 1 second
Episode Artwork

Indexation விகிதம் குறைந்தும் HECS கல்விக்கடன் தொகை குறையாததற்கு என்ன காரணம்?

Federal அரசு HECS மூன்றாம் நிலைக் கல்விக் கடன்களுக்கான indexation விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான மாற்றங்கள் இன்னும் நடைமுறையைக்கு வரவில்லை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
7/25/20247 minutes, 47 seconds
Episode Artwork

ஆஸ்திரேலியாவில் பூர்வீகக்குடியின மக்கள் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரிப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/07/2024) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
7/24/20244 minutes, 26 seconds
Episode Artwork

The Tamil king who gave up his crown for his Australian girlfriend - ஆஸ்திரேலிய காதலிக்காக முடி துறந்த தமிழ் மன்னன்

You may have heard of people saying that they would do anything for love... but have you heard the story of a Tamil king who fell in love with an Australian girl and gave up his hair just to marry her? - காதலுக்காக எதையும் செய்வேன் என்று இளவயதில் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்... ஆனால், ஒரு ஆஸ்திரேலியப் பெண் மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக தனது முடி துறந்த ஒரு தமிழ் மன்னன் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
7/24/202416 minutes, 31 seconds
Episode Artwork

அமெரிக்க அதிபராக வெள்ளை இனமில்லாத பெண்ணை மக்கள் ஏற்பார்களா?

அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு இன்னமும் சுமார் நூறு நாட்களே இருக்கின்ற போதிலும், Democratic கட்சி வேட்பாளராக, அமெரிக்க அதிபர் Joe Biden இந்த வருட அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா Harris போட்டியிடுவார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
7/24/202410 minutes, 34 seconds
Episode Artwork

இந்திய நிதிநிலை அறிக்கை 2024 – ஒரு பார்வை

இந்தியாவில் நேற்று நிதி நிலை அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையிலுள்ள தகவல்களையும், அது தொடர்பாக இந்தியாவில் எழும் விமர்சனங்களையும் தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
7/24/20249 minutes, 43 seconds
Episode Artwork

சிட்னியில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் ஏழு பேர் மீட்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
7/24/20243 minutes, 32 seconds
Episode Artwork

NSW -இல் Demerit புள்ளிகளில் முறைகேடு செய்பவர்களை குறிவைக்கும் புதிய பணிக்குழு!

NSW அரசு Demerit புள்ளி முறையை தவறாக கையாளும் ஓட்டுநர்களை விசாரிக்க taskforce பணிக்குழுவை நிறுவுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/24/20242 minutes, 4 seconds
Episode Artwork

குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி!!

கோவிட் பேரிடருக்கு பிந்தைய குழந்தை பிறப்பு ஏற்றத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/23/20242 minutes, 15 seconds
Episode Artwork

தமிழ் திரை உலகின் முதல் பின்னணி பாடகர்!

தமிழ் திரையுலகில் சாகா வரம் பெற்று விளங்கும் பின்னணிப் பாடகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திருச்சி லோகநாதன் அவர்கள். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் ( 24 ஜூலை 1924 – 17 நவம்பர் 1989) கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் கடந்துவந்த பாதை, உச்சம் தொட்ட தருணங்கள் என்று பல தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
7/23/202411 minutes, 51 seconds
Episode Artwork

நினைத்தது பத்தாயிரம், கிடைத்தது மில்லியன் டாலர்!

NSW பெண்மணி தனது $1 மில்லியன் லோட்டோ வெற்றியை $1000 என்று தவறாகக் எண்ணிய போது உண்மை தெரிந்த சமயம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/23/20242 minutes, 2 seconds
Episode Artwork

நிரந்தர விசா கோரி உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன்பு போராட்டம் தொடர்கிறது

செய்திகள்: 23 ஜூலை 2024 செவ்வாய்க்கிழமை வாசித்தவர்: றைசெல்
7/22/20244 minutes, 46 seconds
Episode Artwork

சிட்னியில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இந்திய தந்தையும் குழந்தையும் மரணம்!!

சிட்னி Carlton ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த இரண்டு பெண் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் ஒரு குழந்தையும் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/22/20241 minute, 54 seconds
Episode Artwork

இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இந்திய மீனவர்கள் திருடுகிறார்களா?

இலங்கை வட பகுதி மீனவர்கள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் ஒரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
7/22/202410 minutes, 38 seconds
Episode Artwork

What caused the global technological crash that crippled various industries? - உலகையே முடக்கிய தொழில்நுட்ப செயலிழப்பிற்கு என்ன காரணம்?

The IT outages have significantly impacted major banks, media outlets, and airlines around the world. With numerous flights suspended, passengers are now facing long queues at airports. - தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
7/22/202410 minutes, 19 seconds
Episode Artwork

அமெரிக்காவின் அடுத்த அதிபராக தமிழர் தேர்வாகும் வாய்ப்பு

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/07/2024) செய்தி.
7/22/20244 minutes, 18 seconds
Episode Artwork

இனவெறி ஏன் இன்னும் பரவலாக இருக்கிறது? அதை நீங்கள் எப்படித் தடுக்கலாம்!

நம் நாட்டில் இனவெறியின் பரவலான தன்மையை விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதனை சமாளிக்க சமூகத்தில் மாற்றம் தேவை என்ற அவசியத்தைக் குறிப்பிடுவதுடன் இனவெறியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
7/21/202412 minutes
Episode Artwork

இன்னும் நான்கு ஆண்டுகளில் நாட்டில் நான்கு லட்சம்பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர்!

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைய உள்ளனர். இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
7/21/20242 minutes, 35 seconds
Episode Artwork

Divorce: Understanding the law and planning your next steps - விவாகரத்து: சட்டம் என்ன சொல்கிறது? எப்படி திட்டமிடுவது?

With divorce rates on the rise in Australia, Viji Virassamy, Principal Solicitor and Notary Public at Shal Lawyers and Associates in NSW, explains the steps to take for those considering divorce or separation. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் மணமுறிவு அதிகரித்துவரும் நிலையில் விவாகரத்து அல்லது பிரிந்து செல்லும் முடிவை மேற்கொள்ள நினைக்கின்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் NSW மாநிலத்தில் Shal Lawyers and Associates நிறுவனத்தில் Principal Solicitor மற்றும் Notary Publicயாக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
7/20/202410 minutes, 50 seconds
Episode Artwork

இந்த வார முக்கிய செய்திகள்

இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
7/20/20244 minutes, 57 seconds
Episode Artwork

Vaping: prevalence, risks, and helping your teenager quit - வேப்பிங் (vaping) ஏன் ஆபத்தானது? அதற்கு அடிமையானவர்களுக்கு எப்படி உதவுவது!

Major regulatory changes in 2024 have brought about restricted access to vaping products in Australia. The crackdown on what is dubbed a “major public health issue” could lead to an increased number of teens seeking support to overcome the nicotine addiction, experts think. Learn about the health risks and ways to help young people in their quitting journey. - நம் நாட்டில், நெருப்பின்றி புகை பிடிக்கும் வேப்பிங் (vaping) பொருட்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் ஒரு “முக்கிய சுகாதார பிரச்சினை” என்று விவரிக்கப்பட்டுள்ளது, அத்துடன் பதின்ம வயதினரிடையே வேப்பிங் செய்யும் பழக்கம் பெருகி வருவது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பிங் செய்வதை நிறுத்துவது இளைஞர்களுக்குச் சவாலாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், வேப்பிங் பழக்கத்திலிருந்து விலக விரும்புபவர்களுக்கு எப்படியான ஆதரவு வழங்க முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம். Zoe Thomaidou தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
7/19/20249 minutes, 21 seconds
Episode Artwork

NATO is 75. Has it achieved its objectives? - NATO, வயது 75. அதன் நோக்கங்களை அடைந்துவிட்டதா?

NATO is 75 years old but still standing strong. An interview with journalist and political observer Ainkaran Vigneswara to detail what NATO has achieved in the past 75 years and its contribution to world peace (or not). Kulasegaram Sanchayan’s interview with Ainkaran also explores a detailed discussion on the possibility of India joining NATO. - NATO என்ற அமைப்பு 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. இன்றும் வலுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் NATO சாதித்தவை என்ன, உலக அமைதிக்கு (அதன் பங்களிப்பு என்ன, இந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்ற பல விடயங்கள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் அவதானியுமான ஐங்கரன் விக்னேஸ்வராவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
7/19/202417 minutes, 4 seconds
Episode Artwork

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
7/19/20248 minutes
Episode Artwork

நவுரு தீவில் குடிவரவு தடுப்புக்காவலில் தற்போது 96 பேர்; 22% கடுமையான மனநல பிரச்சனைகளுடன்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/07/2024) செய்தி.
7/19/20244 minutes, 24 seconds
Episode Artwork

பாடசாலையிலுருந்து பைக்கில் வீடு திரும்பிய 11 வயது இந்திய மாணவன் பேருந்து மோதி பலி!

குயின்ஸ்லாந்து மாநிலம் Sunshine Coast-இல் இரு சக்கர பைக்-இல் பாடசாலை விட்டு வீடு திரும்பிய 11 வயது பாடசாலை மாணவன் ஒருவன் 6 மாணவர்களை ஏற்றி வந்த பாடசாலை பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/19/20241 minute, 55 seconds
Episode Artwork

Moonlanding and the Dish at Parks, NSW - சந்திரனில் மனிதன் முதன் முதல் காலடி வைத்த போது......

Kalaththulli is a compilation of Historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. In this episode, our producer - பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
7/19/20243 minutes, 34 seconds
Episode Artwork

Paris 2024: ஒலிம்பிக்தீபம் ஏந்திய தமிழன் - புதுமைகளும் முன்னேற்பாடுகளும்

அடுத்தவாரம் பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், புதுமைகள் மற்றும் பல தகவல்களை பாரிஸ் நகரிலிருந்து விவரிக்கிறார் ஊடகவியலாளர் வாசுகி குமாரதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
7/18/202411 minutes, 30 seconds
Episode Artwork

மின்சார பயன்பாட்டை அளக்க Smart Meter: கட்டணம் அதிகரிக்குமா?

மின்சார கட்டணம் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் வீடுகளில் பொருத்தப்பட்டு வரும் ‘smart meters’ என்ற மீட்டர்கள் காரணமாகவே மின்கட்டணங்கள் அதிகரிப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மைதானா? ஏன் smart meter பொருத்த மின் வழங்குநர் கட்டாயப்படுத்துகின்றனர்? இதற்கு யார் செலவழிப்பது? என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
7/18/20249 minutes, 18 seconds
Episode Artwork

Millaa Millaa Falls நீச்சல் பகுதில் இந்திய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள பிரபலமான நீர்வீழ்ச்சி Millaa Millaa Falls-இல் உள்ள நீச்சல் இடத்தில நீந்த சென்ற இரண்டு இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
7/18/20242 minutes, 14 seconds
Episode Artwork

மதம்: மணியனின் பார்வை

தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு “மதம்” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.
7/18/202410 minutes, 42 seconds
Episode Artwork

பல லட்சம் மக்களுக்கு கட்டணத்தை திரும்பத் தரும் நான்கு பெரிய வங்கிகள்!

நாட்டில் இயங்கும் நான்கு மிகப் பெரிய வங்கிகளும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் தவிர்த்திருக்கக்கூடிய கட்டணங்களை வசூலித்துள்ளன. சிக்கலான செயல்முறைகளை வங்கிகள் நடைமுறைப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிதி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று Australian Securities and Investment Commission அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த நான்கு வங்கிகளும் அப்படி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Phoebe Deas & Ciara Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
7/18/20247 minutes, 55 seconds
Episode Artwork

The yearning never stops - புத்தம் புது "பூமி"?!

Scientists using NASA's planet-hunting Kepler telescope have found a planet beyond the solar system that is a close match to Earth. Last week. New Horizon sent detailed images from Pluto. - மனிதன் பூமியிலிருந்து சென்று குடியேறலாம் அல்லது மனிதர் போன்ற உயிரினங்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதற்கு Kepler 452b என்று பெயரிட்டுள்ளனர்.
7/18/20241